(Reading time: 3 - 5 minutes)

 என்றும் என் நினைவில் நீயடி

                            - Nila Ram

 

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா ?

 பிரச்சனைகள் வரும்பொழுது இல்லை ........

 பிரச்சனைகளை கண்டு பயந்து ஒதுங்கும்பொழுது தான்.....

                    

பச்சை புல்வெளி அந்த அருகம் புல்லின் மேல் சின்ன சின்ன பனித்துளிகள் கலிலியோவின் தொலைநோக்கி கண்டுபிடிக்க உதவியாய் இருந்த தத்துவங்களை கொண்டு பெரிய உருவங்களை சிறியதாய் மாற்றி அதையும் மிக அழகாய் பிரதிபலிக்கும் அதன் தூய்மை, சில்லென வீசும் காலை காற்று, புதிதாய் பூத்திருக்கும் ரோஜா மலர் அனைவரையும் ஈர்க்கும் அதன் மேல் உள்ள பனித்துளி.இவை அனைத்தும் அங்கு வருபவர்கள் எப்பொழுதும் ரசிக்கும் காட்சிகள் . ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் தன் உடல்பயிற்சியை தொண்டர்ந்து கொண்டிருந்தாள் நம் கதையின் கதாநாயகி நிலா என்று அழைக்கப்படும் நித்திலா. இருபத்தி ஆறு வயது நிரம்பிய இளம்பெண். ஆனால் இளம்பெண்ணிற்கு உரிய எந்த விதமான குறும்பும் இல்லாமல் முகத்தில் கடினத்தன்மையும் ஒரு கம்பிரமும் அமைதியும் கொண்டுள்ள அழகி .நீண்ட கூந்தலும் அதை எடுத்து முடிந்துள்ள அரவம் அற்ற அழகே அவளுக்கு இன்னும் அழகிற்கு அழகை சேர்த்தது. இருந்தும் அந்த கண்கள் மட்டும் ஏதோ கதை சொல்லுவதை போன்று தோன்றும் . தன் காலை வேலைகளை முடித்து கொண்டு ஆபீஸ் கிளம்பி வந்த மகளை வெச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தனர் அவளது தாய் ஜானகியும் தந்தை  ராமனும் . அந்த ஜானகி ராமனை போன்று இருவருக்குள் இருக்கும் அன்புக்கு பஞ்சமில்லை. ஏனோ இவர்களின் காதலே இவர்களின் மகளுக்கு எமனாய் அமைந்ததை எண்ணி இன்றும் வருந்துகின்றன இருவர் நெஞ்சமும் . சாப்பிடுவதற்காக டைன்னிங் டேபிள் வந்தால் நித்திலா .

''அம்மா டிபன் ரெடியா'' என்றாள் நித்திலா

''ரெடி மா நீ சாப்பிட்டு ஆபீஸ் போ மதியத்துக்கு பேக் பண்ணி டிரைவர் கிட்ட தந்து விடறேன்''. என்றார் ஜானகி

''இல்லாம இன்னைக்கு ஆபீஸ் ல மீட்டிங் இருக்கு அத முடிச்சுட்டு ந வெளிய சாப்பிட்டுக்கறேன்''. என்றாள் நித்திலா

''இல்ல நிலா மா சொன்ன கேளு வெளிய சாப்டா  உடம்பு என்னத்துக்கு ஆகிறது அதனால நீ வீட்டுக்கு வந்துடுமா''

''அம்மா சொன்ன கேளு எனக்கு மீட்டிங் இருக்கு''

''ஜானு அவ தா சொல்லற இல்ல விடு அவளுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு'' என்றார் ரா

 

''ஆமா இவளை கெடுக்கறதே நீங்க தான்'' .        

''அம்மா நீ ஏன் அப்பாவை திட்டற எனக்கு மீட்டிங் எனக்கு எத்தனை மணிக்கு முடியும்னு தெரியல சோ சீக்கிரம் முடிஞ்சா லஞ்சுக்கு வீட்டுக்கு வரேன் ஓகே வா'' என்று கூறிய படி தான் காரை எடுத்துக்கு கொண்டு ஆபீசை நோக்கி சென்றால்.பாவம் அவள் அறியவில்லை இன்றும் நடக்கும் மீட்டிங்கில் அவள் தன் நிம்மதியை தொலைக்கப்போவதை அறியாமல்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.