(Reading time: 4 - 7 minutes)

                  என்றும் என் நினைவில் நீயடி - 4

                                          - Nila Ram

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா

                              சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா

                                 சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை

            முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார்

                                  கன்னத்து முத்தமொன்று

AN கார்மெண்ட்ஸில் தனது அறையில் எப்பொழுதும் போல தனது வேலையைகளில் மிகவும் பிஸியாக இருந்தான் ஆதி.தனது ப்ராஜெக்ட் ஐ நிலவிடம் குடுத்த பிறகு இன்னும் அவளை சென்று பார்க்கவில்லை . இன்று அவளிடம் பேசியே அகா வேண்டும் என்ற குறிக்கோளோடு தனது வேலைகளை செவ்வனே முடித்து கொண்டு நிலா கார்மெண்ட்ஸ் நோக்கி சென்றது அவனது நண்பன் ஜாகுவார் . என்ன தான் நிலாவை காண போகிறோம் என்றாலும் அவன் மனமோ கடந்த ஒரு வரமாக தனக்கும் தனது தந்தைக்கும் நடந்து கொண்டிருக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தை பற்றியே நினைத்து கொண்டிருந்தது .அன்று அவன் நிலாவை சந்தித்ததை பற்றி தன் அன்னையிடம் கூறிய பிறகு நடந்ததை நினைத்தான்.

‘’ஆதி விளையாடாத நிஜமா என்னோட பொண்ண பாத்தியா, சொல்லுடா’’ ?    

‘’லஷ்மி என்னைக்குமே ஆதி தான் நம்ம மகன் , அந்த பொண்ணு இல்ல’’ என்று கர்ச்சித்தர் அவர்

‘’என்னங்க இத்தனை வருடம் ஆகியும் அவ மேல உங்களுக்கு கோவம் போகலையா என்ன இருந்தாலும் அவளும் நம்ம பொண்ணுங்க’’

‘’சும்மா நம்ம பொண்ணு நம்ம பொண்ணு சொல்லாத லஷ்மி அவ என்ன உன்னோட சொந்த மகளா என்ன’’? கேட்டே விட்டிருந்தார் அதை

‘’அப்பா’’ என்றான் ஆதி அவர் சொன்ன வார்த்தையை கேட்டு

‘’சும்மா கத்தாதே ஆதி , என்னைக்கும் நான் சொல்லறதை கேட்டுட்டு இருக்க என்னோட மனைவியையே என்னையவே கேள்வி கேக்க வெச்சுட்டா அந்த பொண்ணு இதே மாரி தா அன்னைக்கு நீயும் என்ன கேள்வி கேட்ட அதனால தான் அந்த பொண்ண நான் யார்கிட்டையும் சொல்லாம வீட்டை விட்டு  போக சொல்லி சத்யம் வாங்கிட்டேன்’’ என்று கத்தியே விட்ருந்தார் .

அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்து போயினர் இருவரும் .’’அப்பா என்ன பா சொல்லுறீங்க நிலா என்ன விட்டு போனதுக்கு கரணம் நீங்களா’’ என்றான் அவர் சொன்னதை ஏற்க முடியாமல்.

‘’ஆமா டா நான் தான் சொன்னேன். அதுக்கு என்ன இப்போ’’ என்றார் அவர்

‘’ஆதி பதில் சொல்லும் முன் லட்சுமி ஆதி போ என் மகளை கூட்டிட்டு வா’’என்றார் தளர்ந்து போன குரலில் .

‘’இங்க பார் லட்சுமி அந்த பொண்ணு இங்க வந்த நான் இந்த வீட்டுல இருக்க மாட்டேன்’’ என்றார் கோவத்தில் சிவந்த முகத்துடன் .

''ஆதி நன் போய் என்னோட டிரஸ் எல்லாம் பேக் பண்றேன் என் பொண்ணு இல்லாத வீட்டுல நானும் இருக்க மாட்டேன் . உனக்கு உன் அம்மா வேணும்னா என் கூட வா. இல்லைனா நீயும் இந்த குடும்பம் அந்துஸ்துன்னு அதையே கட்டிக்கிட்டு அழு. நான் போறேன்'' என் கோவமாக தன அறையை நோக்கி சென்றார் அவன் அன்னை .

என்றுமே அமைதியாய் இருக்கும் தன மனையாள் இன்று தன வார்த்தையை மீறி செல்வதை கண்ட ஆதி தன் அமைதியை களைத்து ''அப்பா இப்பவும் சொல்லறேன் எனக்கும் நீங்க எல்லாம் எவ்வளோ முக்கியமோ அதே அளவுக்கு நீத்துவும் முக்கியம் . நீங்க உங்க கௌரவத்தை விட்டுட்டு கொஞ்சம் யோசிங்க ப உங்களுக்கே புரியும் .''

என்ன தான் தன் மேல் தவறு இருந்தாலும் அவரின் மனம் ஒத்துக்கொள்ள மறுத்தது . ''இங்க பாரு ஆதி லக்ஷ்மிக்கு சொன்னது தான் உனக்கும் உங்களுக்கு அவ தா முக்கியமான அவ கூட போங்க இல்ல நான் தா முக்கியம்னா என்கூட இருங்க ஆனா ஒன்னு இனி நிலா நம்ம வாழ்க்கைல வர கூடாது இது தா என் முடிவு'' என்றார் தான் விறைப்புடன்.

''அப்பா கொஞ்சம் நா சொல்லறதை கேளுங்க அப்பா''

''இல்ல ஆதி இனி நீ சொல்லற எதையும் நா கேக்க போறது இல்லை இது தான் என் முடிவு ''.

''அப்பா அப்போ நான் சொல்லறதை கேட்டுக்கோங்க இனி இந்த வீட்டுக்கு நானும் அம்மாவும் வந்தா அது நீத்துவோட தான்''

''என்ன டா என்கிட்டையே சவாலா''

''இல்ல பா இது என்னோட விருப்பம் ''.என்றான் அமைதியாக .

ஆதி அவ்வாறு கூறவும் தன் கோபத்தோடு அறைக்குள் சென்றார் .இவாறாக லக்ஷ்மியும் ஆதியும் அவர்களின் மற்றொரு வீட்டிற்கு வந்து இன்றுடன் ஒரு வாரம் ஆனது .

இவ்வாறு தன் சிந்தனையில் இருந்து மீண்டு தன் நண்பனை நிலா கார்மெண்ட்ஸில் நிறுத்தினான் . வரவேற்பறையில் தான் நித்திலாவை காண வந்திருப்பதாக சொல்லவும் , சிறுது நேரம் வெயிட் பண்ண சொன்னவள் நித்திலாவின் பி ஏ விருக்கு அழைத்து ஆதி வந்த தகவலை சொன்னால். அபியும் உடனடியாக வரவேற்பு பகுதிக்கு வந்து அங்கு இருந்த ஆதியை அழைத்து கொண்டு நித்திலாவின் அறைக்கு சென்றனர் . அங்கு அவர்கள் கண்ட காட்சி இருவரையும் உறைய வைத்தது. அதுவும் ஆதியின் நிலையோ நிலாவை அவ்வாறு காண உயிர் வரை வலித்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.