(Reading time: 4 - 8 minutes)

 

                                                                                                                    கால்கள்   

 

                                                   

                                                       

 

                                                                8-ஆம் நம்பர் டோக்கனை கையில் வைத்துக்கொண்டு, மனக்குழப்பத்துடன் உலகத்திலுள்ள எல்லாத் தெய்வங்கள் பெயரையும் கூறிக் கொண்டு ஆர்த்தோ டாக்டரை பார்பதற்காக மருத்துவமனையில் உட்காந்திருந்தாள் சுமதி.

டாக்டரிடமிருந்து அழைப்பு வந்ததும்,காலாந்தேவியை தோழில் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

வா...காலா... எப்படி இருக்க? என்று செதஸ்கோப்பை காதில் வைத்துக்கொண்டு அவளின் இதயத்துடிப்பை கேட்டார் டாக்டா்.

சரிமா... அந்த சீட்டி ஸ்கேன், ரிப்போட்டை கொடுங்க? என்று அதை வாங்கி புரியாத புதிராக 15-நிமிடம் திருப்பி திருப்பி பார்த்தார். 

மரத்தின் வேர்கள் மாதரி காலாவின் கால் நரம்புகள் அந்த ஸ்கேனில் தெரிந்தது...

காலாவின் கால்களை நீட்டச்சொல்லி ஒரு சின்ன இரும்புக் கம்பியை வைத்து தட்டிப் பார்த்தார்.

ஒன்னும் பிரச்சனை இல்லமா! இப்போ டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துருச்சு..கால் எலும்புகளும் வலுவாகிடுச்சு..

இப்போ ஆப்ரேசன் பன்னிடோம்னா கால்களை சரி செஞ்சுடலாம்... ஆனா கொஞ்சம் செலவாகும்.. 

 

எவ்வளவு டாக்டர்? ஆகும் என்று சுமதி நடுக்கத்துடன் கேட்டாள்… 

 

ஒரு 12-லட்சம் ஆகுமென்றவுடன்...

சுமதிக்கு,பச்சை மரத்தின் அடியில் நின்றவனின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.

அவளுக்கு உலகமே இருண்டு போனது..

காலாந்தேவியின் கால்களை பிடித்துக் கொண்டு அழுதபோது பிரஸ்வ அறையைவிட அந்த டாக்டர் ரூமில் அதிகமான சத்தம் கேட்டது.

உடனே இரண்டு செவிலியர்கள் உள்ளே சென்று சுமதியையும்,காலாவையும் வெளியே இழுத்துச் சென்றனர்..

காலாவை,தோழில் தூக்கிக்கொண்டும் மற்றொரு கையில் ஸ்கேன் ரிப்போட்டை பிடித்துக்கொண்டும் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டாள்.

ரோட்டில், புலம்பிக்கொண்டு போகும் போது,பலரும் தோழில் கிடக்கும் காலாவை உற்றுப்பார்த்துக் கொண்டே எதிரில் வாகனம் வருவது கூட தெரியாமல் சென்று கொண்டிருந்தனர்..

சுமதி பஸ்டாபிற்குள் நுழைந்ததும் அருகிலிருந்தவர்கள் முகம்சுளித்த படியே சற்று தள்ளிநின்றனர்.காலாவை உட்கார வைத்துவிட்டு..

இவ்வளவுநாள் கண்டகனவெல்லாம் வீணாப்போச்சே...

எனக்கிட்ட விக்கிறதுக்கு தாலிகூட இல்லையேடி...

இப்படி கஸ்டப்படுகிறதுக்காடி நீ என்னோட வயித்துல வந்து பொரக்கணும்...

உங்க அப்பாதான் நம்மல கைவிட்டுடான்னா கடவுளும் நம்மல கைவிட்டுடுச்சே...

12-லட்சத்துக்கு எங்கடி போவேன்? என்று வியிற்றில் அடித்துக்கொண்டு அழும்போது...

பஸ்டாபிற்கு கீழ், ஆலமரத்திற்கு அடியில் ஒய்யாரமாக இருப்பது போல்,ஒரு பிஞ்ச குடைக்குள் பராமறிக்காத தோட்டம்மாதிரி வெள்ளைத் தாடியுடன் சட்டை அணியாமல் வாயில் சுருட்டுடன் இருந்த கிழவன் கேட்டான் என்னமா ஆச்சு?

அழுதுகொண்டே கூறினாள். ஐயா,இவளுக்கு பொரந்ததுல இருந்து காலில் நரம்பு கோலாறு.கால்களைப் பாருங்க..இவநாள நடக்கவே முடியாது.

இவ்வளவு நாட்களா மாத்திரை, மருந்துகளால குணப்படுத்தலாம்ணு சொன்னாங்க.. இப்போ ஆப்ரேசன் செஞ்சாதான் சரிபண்ணமுடியுமுனு சொல்றாங்க..12-லெட்சத்துக்கு எங்கய்யாபோவேன்?

ஏறாத கோயில்கள் இல்ல…பார்க்காத டாக்டர்கள் இல்ல..யென்று மூக்கிலிருந்து வடியும் சளியை முந்தானையில் துடைத்துவிட்டு கால்களைப் பார்த்துக் கொண்டே அழுதாள்.

உடனே கோணிச்சாக்கிற்குள் கையைவிட்டு அதனுள் இருந்து வெளுத்துப்போன தடித்த வெள்ளை மாட்டுத் தோலை எடுத்த தாடிக்கிழவன். அவளுடைய கால்களைப் பார்த்துக் கொண்டே ஆணியை வைத்து தோல்களைத் தைத்தான்.

தோல்களோடு மூனடுக்கு ரப்பர் தகடுகளையும், எலாஸ்டிக் கயிறுகளையும் சேர்த்து அவளின் வாழத்தண்டு போல் இருக்கும் கால்களில் மெல்லமாக மாட்டினார்.

இப்போ நீ நடமா என்றவுடன்... காலா-...தாதா வேண்டாம் கால் வலிக்கும் என்றாள்.. அதுலாம் வழிக்காதுத்தா சும்மா எழுந்து நட..

 

சுமதி- ஐயா,அவளுக்கு கால் வலிக்கும்... 

நீ போய் உட்காருமா..என்று மிரட்டிணார் தாடிக்கிழவன்.

ஆத்தா, நீ எழுந்திரி அதுலாம் முடியுமென்று காலாவின் கையைப் பிடித்து தூக்கினான் தாடிக்கிழவன்.

முதல்முறை எழுந்து நின்றதால் அவளுடைய கால்கள் நடுங்கியது.பருவத்தை மறந்து நடைபலகும் குழந்ததையாக மாறினாள்.

அம்மா...அம்மா… நா நடக்குறேன்....பாரு அம்மா... நடக்குறேனென்று இதுவரை கலங்காத காலாவின் கண்கள் கலங்கியது..

சுமதிக்கு பேச்சு வராமல் கிழவனின் காலில் விழுந்தாள்..

எழுந்திரிமா...என்னோட காலில்போய் நீங்க விழுரிங்க... யாராவது பார்க்க போறாங்க என்று கிழவன் பயந்து நடுங்கினான்.

பின் எழுந்து நின்ற சுமதி. ஐயா, 20 வருடத்துக்கு முன்னாடியே உங்களப் பார்த்திருந்தா இவ இன்னேறம் கல்லூரிக்கே போய்ருப்பாலே..யென்று அழுத போது, மருத்துவமனையில் கேட்ட சத்தத்தைவிட பஸ்டாப்பில் அதிகமாக கேட்டது.இதுக்கு என்ன கைமாறு பண்றதுனே தெரியலையா.... என்று அழுது கத்தினாள்.

 

 

 

தீடிரென செல்போன் அடித்தது…ஹலோ..என்று மௌனமாக நின்றாள்..நா டாக்டர் வின்சன் பேசுரன் 12-லட்சம் வேண்டாம்மா.., வெறும் 11-லட்சம் கொண்டுவாங்க பொண்ணுக்கு ஆப்ரேசன் பண்ணீர்லாம்...ஓகே வா...   

 இல்ல...டாக்டர் காலாவுக்கு கால்கள் வந்துருச்சு....

 

 

 

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.