Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)
Pin It

            என்றும் என் நினைவில் நீயடி - 5 

                                             - Nila Ram

“தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
பாவை தெரியு தடி''!

சற்றுமுன் தன் அறையில் அமர்ந்த நித்திலாவிற்கு ஏனோ தன் பழைய நினைவுகள் அனைத்தும் போட்டி போட்டு கொண்டு வந்து அவள் முன் நிழலாடின . அதுவும் அவன் நினைவுகள் ஆதியை கண்ட நாள் முதல் அதிகமாக வர துவங்கின . இன்று காலை முதலே அவளின் உடல் சற்று சோர்ந்தே இருந்தது. என்றும் கொஞ்சம் விரைவாக எழும் பழக்கம் கொண்ட நிலா இன்று எழுந்திரிக்காததை கண்ட ஜானகி நித்திலாவின் கதவை தட்டிய படி'' நீத்து மா எழுந்திரு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு பார்'' என்றார் .

நீண்ட நேரம் ஆகியும் மகளின் அறை கதவு திறக்காததை கண்டு கொஞ்சம் பதட்டமாகவே மீண்டும் அறை கதவை தட்டினார் . நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிலா கதவை திறந்தாள் . அங்கு நின்ற தாயிடம் அம்மா சாரி மா கொஞ்சம் டையார்ட் டாஇருந்துச்சு அதான், நீ போ மா நான் குளிச்சிட்டு வரேன் என்றாள்.

இல்ல நிலா நீ பாக்க ரொம்ப சோர்ந்து தெரியற அதனால நீ ஆபீஸ் போகதமா என்றார்

அம்மா நா என்ன சின்ன பாப்பா வா, கொஞ்சம் வேலை அதிகம் அதான் சோர்ந்து தெரியறேன் . இன்னைக்கு வேற அந்த கடன்காரன் அத்து வோட ப்ராஜெக்ட் பைனல் பண்ணனும் . இன்னும் எவ்வளோ நாள் தன் அவன்ட இருந்து ஓடி ஒளியறது. இனி நானா அவனான்னு பாக்கறேன் என்று பொரிந்து தள்ளிய நிலவிற்கு அப்பொழுதான் உரைத்தது . தான் இன்னும் ஆதியை சந்தித்தது பற்றி தன் அன்னையிடம் கூறாதது .

 சாரி மா நன் ஆபீஸ் டென்ஷன்ல அவனை பார்த்ததை உன்கிட்ட சொல்லல என்றாள் பதட்டத்துடன் .

நீத்து நீ எதுக்கு இவ்வளோ டென்ஷன் ஆகற . எனக்கு நீ என் மகனை பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம் . நீ ஏன் இன்னைக்கு லேட்டா எழுந்தேன் தெரியுது . ஆனா அம்மாவுக்காக இத மட்டும் செய் ஆதியை முடிஞ்சா என்ன வந்து பாக்க சொல்லு மா எனக்கு அவனை பாக்கணும் போல இருக்கு .

கண்டிப்பமா எனக்காக இல்லைனாலும் உனக்காக வந்து பாத்துட்டு போக சொல்லறேன் மா

நீத்து இன்னொரு விஷயம் , ரொம்ப நாள் கழிச்சி உன்னோட உண்மையான குணம் இன்னைக்கு கொஞ்சம் வெளிய வந்துச்சு ரொம்ப சந்தோசம் டா , கண்டிப்பா ஆதி உன்ன மாத்திடுவான் எனக்கு நம்பிக்கை இருக்கு . என்றார்

தன் அன்னை கூறியதை கேட்டதும் ஒரு இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது அவளிடத்தில் , அம்மா யாரும், என்னை மாத்த தேவை இல்ல நான் இப்படி இருக்கறது தான் எனக்கு பிடிச்சிருக்கு என்று கூறியவள் சட்டென்று தன் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டு கொண்டாள். அவள் மறக்க மற்றும் அவனிடமிருந்து மறைக்க நினைக்கும் நினைவுகள் அனைத்தும் அவளை இன்னும் சோர்வாக்கியது .

இருந்தும் தன் கடமையை எண்ணி தன் அலுவலகத்திற்கு சென்றவள் தான் இன்று முடிக்க வேண்டிய ப்ரொஜெக்ட்டினை சரி பார்த்து அதற்க்கு தேவையான சேஞ்சஸ் செய்து கொண்டிருந்தாள் மணி 3 யை தாண்டி சென்றது . காலையில் சாப்பிடாமல் வந்ததும் இரவு சரியான தூக்கம் இல்லாமையும் சேர்ந்து அவளின் நிலையை இன்னும் மோசமடைய செய்தது . உடலில் உண்டான சோர்வு அவளின் நிலையை மறக்க செய்ய கண்கள் இரண்டும் சொருகி தரையில் மயங்கி விழுந்தால் நித்திலா . சரியாக அதே நேரம் ஆதியும் அபியும் உள்ளே வர இருவரும் அவளின் நிலையை கண்டு அதிர்ந்து நின்றனர் . ஆதியே முதலில் தன் நிலையில் இருந்து வேலு வந்து உடனே நிலாவை நெருங்கினான் . அவளின் கன்னத்தை தட்டிய படியே நீத்து இங்க பாரு நா ஆதி வந்துருக்கேன் .நீத்து நீத்து என்று தட்டினான் . அவள் நினைவு திரும்பாததால் , அபி நீத்து மார்னிங் சாப்பிட்டாளா என்றான் .

சாரி சார் எனக்கு தெரியாது , அவங்க கிட்ட நா எதுவும் கேக்கல

என்ன அபி நீங்க அவ சாப்டலா என்னனு க்கோட தெரிஞ்சுக்காம என்ன பி ஏ வா இருக்கிங்களோ. சரி விடுங்க நீங்க அவளுக்கு குடிக்க ஏதாவது கொண்டுவாங்க என்று அவளை அனுப்பினான் . பின் தண்ணீரை அவள் முகத்தில் தெளித்து அவளை எழுப்பியவன் அவளுக்கு அபி கொண்டு வந்த ஜூஸ் கொடுத்தான் .

சிறிது ஜூஸ் உள்ளே சென்றவுடன் கொஞ்சம் தெளிந்தவள் அப்பொழுதான் ஆதியின் கையில் தான் இருப்பதை எண்ணி அவசரமாக விழக எததனிக்க  அவளை தடுத்தவன் அண்ணனின் கைக்குள் தங்கச்சி இருக்கறது தப்பு இல்ல நீ குடி என்றான் . அவன் கூறியதை கேட்டு திகைத்த அபி பின் சுதாரித்து எதையும் காட்டி கொள்ளாமல் இருந்தால் . நீத்து அவன் சொன்னதை கேட்டு , அத்து நான் நல்லா இருக்கேன் , விடு என்றாள் .

நிலா தன்னை அத்து என்று கூப்பிட்டதை எண்ணி மகிழ்ந்து , நிலா என்ன என்னனு கூப்பிட்ட என்றான். தன் உதட்டை கடித்து தலை குனிந்து கொண்டால் . நீத்து இதுக்கு மேல நீ நடிக்க வேண்டாம் , என்ன பிரச்சன வந்தாலும் பாத்துக்கலாம்.அதுவும் இல்லாம நீ எதுக்கு அந்த வீட்டை விட்டு வந்தனும் எனக்கு தெரியும் . அப்பா எல்லாமே சொல்லிட்டாங்க என்றான் ஆதி . உடனே அவனை பார்த்தவள் கண்கள் கலங்கியது , தழு தழுத்தவாறே அத்து அப்போ அம்மாவுக்கும் தெரியுமா , இல்ல நீ சொல்லிட்டியா ? அம்மாட்ட சொல்லாத அத்து அவங்க ரொம்ப பீல் பண்ணுவாங்க  என்றாள். ஏன் டி இப்பவும் அவங்க பத்தி தான் யோசிப்பியா ?உன்ன பத்தி யோசிக்கவே மாட்டியாஎன்றான் சற்று கட்டமாகவே .அத்து நீ என் அண்ணன் டா நீ சந்தோசமா இருக்கணும் அதன் என்றாள் தோய்ந்து போன குரலில் . அவள் குரலின் வித்தியாசத்தை அறிந்தவன் சரி சரி விடு இப்போ வா நம்ம வீட்டுக்கு போலாம் என்றான் . இல்ல டா அம்மா அப்பாட்டசொல்லணும் நா இன்னொரு நாள் வரேன் . என்றாள் . ஆதிக்கு நிலா சொன்ன விஷயம் புதிது . நீத்து அம்மா அப்பா வா எனக்கு புரியல யாரை சொல்லற நீ என்றான் ,

 

Pin It
Add comment

Comments  
# என்றும் என் நினைவில் நீயடி - 5Vinoudayan 2020-09-01 16:05
Nice epi sis👏Adhi brother but avanuku nila parents nu solravsnga theriyalaiya :Q: Eagerly waiting for nila answer sis (y)
Reply | Reply with quote | Quote
# RE: என்றும் என் நினைவில் நீயடி - 5 madhumathi9 2020-09-01 11:27
:Q: uzhappama irukke.adutha epi padithaal purinthuvidum endru ninaikkiren :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Your Articles

You have not shared any articles. To start sharing, please register by visiting Flexi Registration

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top