உன்னை மறுபடியும் சந்திக்க
நான் ஏற்பேன் காதல் நோன்பு
கனவுகளின் தொடுதலில்
சிலிர்த்திடும் என் உணர்வுகளில்
நீக்கமற நீ என்றும் நிறைந்திட
நான் முடிக்கவேண்டும்
இந்த காதல் நோன்பினை!
உன் வலிமையான கரங்களில்
என்னிடை துவள
கவிதையாய் இதழ்களில்
உனக்குள் என்னை உணர
இன்னும் எத்தனை நாள்
நான் தொடரவேண்டும்
இந்த காதல் நோன்பினை?