(Reading time: 5 - 9 minutes)

வானதியை அந்த நிலையில் கண்ட அவரால் வாயை பொத்திக்கொண்டு அழ மட்டுமே முடிந்தது. தலையில் அடிபட்டதால் இரத்தம் வழிந்துக்கொண்டிருக்க.. முகத்தில், கை, கால்களில் நகக்கீறலினால் வரிவரியாய் ரத்தக்கோடுகள்... மேலாடை கிழிந்திருக்க கீழாடை யின்றி ஒரு கோர நிலையில் அவளை கண்டவர்கள் உணர்ந்தே இருந்தார்கள் அந்த பெண்ணிற்கு என்ன நேர்ந்திருக்குமென்று...

பெண்ணாய் பிறந்ததாலே இத்துனை துன்பங்களை அனுபவித்திருக்கிறாள். நாள்தோறும் நாட்டில் நிகழும் கற்பழிப்பு சம்பவங்கள் ஒரு தொடர்கதையாகவே உள்ளது. குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கபடுகிறார்களா என்றால் கேள்விக்குறி மட்டுமே நமக்கு பதிலாய் கிடைக்கும். ஒரு பெண்ணின் சடலம் கல்லூரியின் அருகே இருப்பதை கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் செய்தி ஊடகங்கள் அனைத்தும் ஒன்றுகூடிவிட அவ்விடமே பரபரப்பை தொற்றிக்கொண்டது.

உடனடியாய் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு.. இறந்தததாய் கூறிய வானதியை மருத்துவமனை கொண்டு சென்றனர். வானதி உயிருடன் தான் இருக்கிறாள் என்பதை உணர்ந்த ஆம்புலன்சில் இருந்த செவிலி அதை அனைவரிடமும் கூற வானத்திக்காக கடவுளிடம் முறையிட ஆரம்பித்துவிட்டனர் பலர். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வானதியை காப்பாற்ற காற்றை கிழித்துக்கொண்டு சென்றது அந்த வாகனம்.

மருத்துவமனையில் வானதியின் நிலையை கண்ட மருத்துவர்கள் விரைவில் சிகிச்சையை தொடங்கியிருந்தனர். தன்னுடைய பணியை முடித்துக்கொண்டு கிருஷணப்ரியாவும் வானதியை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வந்து சேர்ந்தாள். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்க வெளியில் பதட்டத்துடன் கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள்.

"மேடம் இதுல கையெழுத்து போடுங்க" என்ற குரலில் பழைய நினைவுகளில் இருந்து தன்னை மீட்டுக்கொண்ட பிரியா (அதுதாங்க நம்ம கிருஷ்ணப்ரியா இனிமேல் சுருக்கமா பிரியா தான்....) அந்த செவிலி காட்டிய இடத்தில் கையெழுத்திட்டு அவளிடமே நீட்டினாள். "உங்க தலைமை மருத்துவர் எங்க இருப்பாங்க? நான் அவங்களை பார்க்க முடியுமா?" என்ற கேள்வியுடன் அந்த செவிலிப்பெண்ணை ஏறிட்டாள் பிரியா.

"அதோ அந்த கடைசி ரூம்ல இருப்பாங்க" என்று ஓர் அறையை நோக்கி கைகாட்டிவிட்டு தன்னுடைய அலுவலை காண சென்றுவிட்டாள். அவள் சுட்டிக்காட்டிய அறையை நோக்கி சென்ற பிரியா அனுமதி பெற்று உள்ளே நுழைந்தாள்.

5 comments

  • [quote name="Sindhuja Ramesh"]Hi aishu,. முதலில் இந்த தொடர்கதைக்கு எனது வாழ்த்துக்கள் . :GL: கதையின் தொடக்கம் மிக அருமை. :clap: இன்றைய சூழலில் நாம் எத்துணை பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே ஆதாரம் . :angry: தொடர்கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் :GL: & :thnkx:[/quote] மிக்க நன்றி சகியே
  • Hi aishu,. முதலில் இந்த தொடர்கதைக்கு எனது வாழ்த்துக்கள் . :GL: கதையின் தொடக்கம் மிக அருமை. :clap: இன்றைய சூழலில் நாம் எத்துணை பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே ஆதாரம் . :angry: தொடர்கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் :GL: & :thnkx:
  • [quote name="madhumathi9"]:sad: thodakkam manathai pisaigirathu. :Q: priyavukku nandhanai munnadiye theriyum polirukku.eaherly waiting 4 epi :thnkx: & :GL:[/quote] nandri.....aamam sagiye. Inivarum epikalil iruvarai patriyum purinthu kolveergal
  • நன்றி....... ஆமாம் சகியே. அடுத்தடுத்த எபிகளில் இருவரை பற்றியும் புரிந்து கொள்வீர்கள்.
  • :sad: thodakkam manathai pisaigirathu. :Q: priyavukku nandhanai munnadiye theriyum polirukku.eaherly waiting 4 epi :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.