(Reading time: 10 - 19 minutes)

“உன் பேரு என்ன?” 

 

“பிரியா” 

 

“அப்பா பேரு” 

 

“தெரியாது” 

 

“அம்மா பேரு?” 

 

“தெரியாது” 

 

“நீ எங்க இருந்து வர?” 

 

“அன்னை ஆசிரமத்துல இருந்து” 

 

“என்ன ரொம்ப திமிரா தான் பேசுவியோ?… சார், மேடம்னு லாம் மரியாதை வராதோ..” 

 

என்று அவர்களில் ஒருவன் கேட்க… பெரிதும் முயன்று “அப்படிலாம் இல்ல சார்” என்றாள் பிரியா. 

 

பேராசிரியர் ஒருவரை பார்க்க சென்றிருந்த நந்தன் எட்டாவது நபராய் அப்பொழுது தான் அங்கு வந்து சேர்ந்தான். வந்தவன் நின்றிருந்த மூவரையும் கண்டு… “என்னங்க டா மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா…. பார்த்து டா இவங்களையும் கம்பளைண்ட் செய்ய வைச்சுடாதீங்க!!” என்று நக்கலாய் சிரித்தான். 

 

நந்தன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்க… மற்றொரு மாணவனோ ப்ரியாவிடம் “நீ எப்படி படிச்சு கவர்மெண்ட் காலேஜ்க்கு வந்த?” என்று கேலியாய் கேட்க அங்கிருந்த ஒரு மாணவியோ, “உண்மையிலே நீ படிச்சு தான் இங்க சேர்ந்தியா?” என்ற கேள்வியுடன் ப்ரியாவை நோக்க… அவள் அருகிலிருந்த பெண்ணோ “இவ முகத்தையும் ஆளையும் பார்த்தா தெரியல… இவ படிச்ச லட்சணம்…. அம்மா அப்பா பேரு கூட தெரியாத உனக்குலாம் எதுக்கு மருத்துவர்ங்கிற பட்டம்… பேசாம போய் வேற ஏதாவது வேலைய பார்க்க வேண்டியது தான” என்று வரம்புமீறி ஒவ்வொருவரும் பேச தனியொருவனாய் அவர்கள் பேசுவதை அந்நிலையில் தடுக்கவும் முடியாமல் “நான்சி அவ்வளோ தான் உனக்கு லிமிட் இப்படிலாம் பேசாத” என்று நந்தன் அதட்ட வரும் முன்பே…. 

 

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.