(Reading time: 10 - 19 minutes)

தைரியமாய் தன்னை கேள்விகேட்டவர்களின் கண்களை பார்த்தபடியே “என்ன கேட்டிங்க… நான் எப்படி படிச்சேன் னு தான… நான் அரசாங்க பள்ளிக்கூடத்துல அவங்க கொடுத்த உணவை சாப்டுட்டு.. என்னால முடிஞ்ச வரைக்கும் படிச்சேன். எனக்கு அப்பா அம்மா இல்லையா அது தான் அரசாங்கம் என்னை வளர்த்துச்சு…. இல்லைனா நானும் உங்களை மாதிரி ஒரு சின்ன பொண்ணு கிட்ட இப்படி கேவலமா பேசிட்டு இருந்திருப்பதேனோ என்னவோ” என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டாள். 

“ஏய் என்ன ரொம்ப பேசுற…” என்று மிரட்டியவனிடம் “நீங்க தான் கேள்வி கேட்டிங்களா சார்ர்ர்ர்ர்… என்று அந்த சார் இல் அழுத்தம் கொடுத்து அதுக்கு தான் பதில் சொல்லிட்டு இருக்கேன்” என்றாள். 

 

அவன் அருகில் இருந்த, பெண்ணிடம் பிரியா “என் முகத்துல என்ன தெரியுது… நான் எப்படிப்பட்ட பொண்ணுன்னா… தெரியட்டும்… ஆனா நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்லைனு உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… எப்பவும் ஒருத்தங்களை வெளி தோற்றத்தை வைச்சி எடை போடாதீங்க மேடம். உங்க எண்ணம் பல சூழ்நிலைகளில் தவறாக தான் இருக்கும். 

 

அப்பறம் இன்னொன்னு இந்த கல்லூரில என்னோட மதிப்பெண் பார்த்து தான் சீட் கொடுத்தாங்க… முகத்தை பார்த்து இல்லை…” என்று கர்ஜித்தாள்… “எனக்கே பாடம் நடத்துறியா டி?” என்று அந்த மூத்த மாணவி பொங்க கொஞ்சமும் அசராமல் கண்களில் உக்கிரத்தோடு அவளை பார்த்த ப்ரியாவை கண்டு சற்று பயந்துதான் போனாள். 

 

தன் தாய் தந்தையை பற்றி கேட்ட பெண்ணிடம் அதே உக்கிர பார்வையோடு திரும்பிய பிரியா “என்ன சொன்னிங்க… அம்மா அப்பா இல்லாத எனக்கு எதுக்கு மருத்துவர் பட்டமா? எனக்கு எங்க அம்மா அப்பா உயிர் குடுத்தாங்க இந்த உயிரை வைச்சு பல பேரோட வாழ்க்கையை காப்பாற்றணும்னு நான் நினைச்சேன் அதுக்கு எனக்கு இந்த பட்டம் ரொம்ப அவசியம் மேடம். அப்பறம் வேற ஏதாவது வேலை பத்தி சொன்னீங்களே… அதையும் பார்ப்பேன்… என்னனு கேக்கறீங்களா… இன்னும் கொஞ்ச நேரம் நீங்க எல்லாரும் இங்கவே இருந்தா அதோ அங்க தெரியுதுல புகார் பேட்டி அதுல தான் என்னோட அடுத்த வேலை” என்று கெத்தாய் கூறினாள் பிரியா. 

“என்ன எங்களையே மிரட்டி பார்க்குறியா… சீனியர்ஸ் உதவி இல்லாம நீங்க மூணு பேரும் என்ன செய்ய போறிங்கனு நானும் பார்க்க தானே போறேன். என் கண்ணு முன்னாடியே நிக்காதிங்க கிளம்புங்க மூணு பெரும்….” என்று கோபமாய் கத்தினாள் நான்சி என்ற அந்த பெண். அவளுள் தன்னை ஒரு சிறு பெண் நண்பர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவே உணர்ந்தாள். “உன்னை சும்மா விட மாட்டேன் டி” என்று ப்ரியாவை மனதில் கறுவிக்கொண்டாள். 

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.