(Reading time: 11 - 22 minutes)

 

நந்தனே ப்ரியாவை அழைத்து செல்வதாய் சொல்ல முதலில் வேண்டாம் என மறுத்தவள், பின் அவனை தொடர்ந்து சென்றாள். தன் காரில் அமர்ந்தவன் பிரியா வருகிறாளா? என்று பார்க்க… அவன் கூற்றை பொய்யாக்காமல் அவள் வந்துகொண்டிருந்தாள். அவளை பொறுத்தவரை கார் பயணம் என்பது அபூர்வமே. அவள் பயணம் முழுவதும் பேருந்தில் தான். 

 

பயிற்சி மருத்துவராய் சேர்ந்த முதல் மாதத்திலே ஆசிரமத்தில் இருந்து வெளியேறி தனியே ஒரு மகளிர் விடுதியில் தாங்கிக்கொண்டாள். இனியும் பாரமாய் ஆசிரமத்தில் இருக்க அவளுக்கு விருப்பமில்லை. வானதி கடைசி வருடம் பயின்றுகொண்டிருந்ததால் அவள் படிப்பை முடித்துவிட்டு ஒரு வேலையில் சேர்ந்ததும் இருவருக்குமென வீடு எடுத்து தாங்கிக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தனர்.  

 

நினைக்கும் படியே வாழ்க்கை அமைந்து விட்டால் அதன் மறுபக்கத்தை எப்பொழுது காண்பது. மாத மாதம் வரும் சம்பளத்தில் அவளது தேவைகள் போக மீதம் உள்ளதை ஆசிரம அறக்கட்டளையில் சேர்த்துவிடுவாள். வானதி மருத்துவமனையில் இருந்தபொழுது கூட அனைத்து செலவுகளையும் ஆசிரம நிர்வாகிகளே பார்த்துக்கொண்டனர். 

 

மருத்துவமனை வாயிலை வந்தடைந்தவள் அங்கு வரிசையாய் வாகனங்கள் நிற்பதை கண்டு திக்கற்றவளாய் நின்றுக்கொண்டிருந்தாள். அவளை உணர்ந்த நந்தனோ காரில் அமர்ந்தபடியே ஹார்ன் ஒலிக்கவிட, சத்தம் கேட்ட திசையில் பிரியாவும் திரும்பிப்பார்க்க வா என்பதாய் கை அசைத்தான் அவன் சொல்லிற்குட்பட்டவளாய் அவளும் நந்தனை நோக்கி செல்ல உள்ளிருந்தே முன் கதவை திறந்துவிட்டான். 

 

ப்ரியாவும் அமர அரைமணி நேர பயணத்தில் அவள் பணிபுரியும் இடத்திற்கு வந்தடைந்தனர் இருவரும். நந்தனும் அதே கல்லாரியில் தான் பயின்றான் என்பதால் அவன் அங்கு வந்ததற்கு யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. மருத்துவமனை நுழைவுவாயிலை கடந்து ஒரு புங்க மர நிழலில் காரை நிறுத்தியவன் காவியாவிற்கு அழைத்து வாசல் வரை வருமாறு சொல்லி இருந்தான். 

 

ப்ரியாவோ எந்தஒரு சலனமும் இல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள். காவியாவும், சந்தியாவும் ஒருசேர அங்கு வர இருவரிடத்திலும் பொதுவாய் பேசியவன் வானதியின் இறப்பை பற்றி கூற அவர்களுக்கும் ப்ரியாவை நினைத்து வருத்தமாக தான் இருந்தது. 

இந்த ஐந்தரை வருட பயணத்தில் அவளாக எதற்காகவும் யாரிடமும் ஆறுதல் வேண்டி நின்றதில்லை. தோழிகள் இருவரும் கூட அவளது நிலையை மாற்ற முனையவில்லை. அவள் அவளாகவே இருக்கட்டும் என்று விட்டுவிட்டனர். ஆனால் அனைத்தையும் உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தாள் அவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று வேறு ஒரு செயலில் அவளை ஈடுபட செய்துவிடுவர். அப்படி ஒரு முறை அவர்கள் மூவருமாய் சேர்ந்தது தான் பரதம் . இருவரும் ஏனோ தானோ வென இருக்க பிரியா மட்டும் அதில் தன்னை முழுவதுமாய் ஈடுபடுத்திக்கொண்டாள் அவளுக்கு உற்ற துணையாய் பரதமும் மாறிப்போனது. 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.