(Reading time: 5 - 10 minutes)

             என்றும் என் நினைவில் நீயடி - 7

                                      - Nila Ram

   

 மீட்டாத வீணை

தருகின்ற ராகம்

கேட்காது பூங்காந்தலே........

 

ஊட்டாத தாயின்

கணக்கின்ற பால் போல்

என் காதல் கிடக்கின்றதே........

காயங்கள் ஆற்றும்

தலைக்கோதி தேற்றும்

காலங்கள் கைகூடுதே...........

தொடுவானம் இன்று

நெடுவானம் ஆகி

தொடும்நேரம் தொலைவாகுதே............

ஒரு குடும்பத்தின் சந்தோசம் என்பது எப்பொழுதும் ஒன்றாய் இருப்பது மட்டுமல்ல , குடும்பத்தை விட்டு எத்துணை தூரம் விலகி இருப்பின் தன்னுடைய எண்ணங்களில் எப்பொழுதும் நிறைந்து, எத்துணை பெரிய துன்பம் வரினும் அவற்றை ஒன்றாக சேர்ந்து எதிர் கொள்ளுவதும் சந்தோசமே . எப்பொழுதுமே இன்பம் மட்டுமே இருக்குமேயானால் நாம் கடவுளையும் மறந்து விடுவோம் , நம் அனுபவத்தையும் மறந்து விடுவோம் , அதனாலயே நம் வாழ்வினில் இன்பமும் துன்பமும் மாரி மாரி வருகின்றது , வாழ்க்கை எனும் பாடத்தினை கடவுள் ஒருவன் நமக்கு கற்று கொடுக்கும் போது அவன் வைக்கும் எக்ஸாமில் நாம் வெற்றி பெற்றால் நமக்கு கிடைப்பது அனுபவம் என்னும் நல்ல பரிசு . எந்த ஒரு சூழ்நிலையையும் கையாள கூடிய அனுபவம் நமக்கு கிடைக்கும் . அதனால வாழ்க்கையை அதன் போக்கிலே ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் . நீங்க கேட்டுட்டு இருக்குகிறது உங்கள் ஹலோ fm , நான் உங்கள் rj  நிலா . இப்போ உங்க எல்லோருக்கும் பிடித்த நம் இசை புயல் ar ரஹுமான் அவர்களின் பாட்டு வருது இதோட நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு மீண்டும் நாளைக்கு பாக்கலாம் பை கோவை . என்று தன் வேலையை முடித்த கையோடு தன் ஹாஸ்டளை நோக்கி சென்றால் .என்ன தான் வாழ்க்கை பற்றிய தத்துவத்தை கூறினாலும் ஏனோ அவளுக்கு தன் குடும்பத்தை மன்னிக்க அவளால் இயல வில்லை . வேலை முடித்து விட்டு தன் அறையை அடைந்தவள் மனதில் உள்ள வழிகள் அனைத்தும் அவளை அழுத்த தன் உடையை கூட மாற்றம்மல் அப்படியே தனது படுக்கையில் விழுந்தால் . மனம் தன் பழைய நியாபகங்களை மீண்டும் கிளறியது . எத்துணை சந்தோசமாக தன் அன்னையுடன் செல்லம் கொஞ்சி தந்தையுடன் விளையாடி , நிக்கிலாவுடன் சண்டையிட்டு தன் மொத்த சந்தோசத்துடன் வளைய வந்து கொண்டிருந்தாள் . அந்த ருக்குமணி பாட்டி மட்டும் வராமஇருந்தா எவ்வளோ நல்ல இருந்துருக்கும் .உடனே அவள் மனது கூறியது அடியே அந்த பாட்டி வராம இருந்திருந்தா உனக்கு நீ யாருனு தெரிஞ்சிருக்குமா, ஆனாலும் அவங்க உன்ன எவ்வளோ நல்லா பாத்து கிட்டாங்க நீ ஏன் விட்டுட்டு வந்த என்று ஒரு குட்டு வைத்தது . அறிவோ அது எப்படி நமக்கு சொந்தம் இல்லாத இடத்துல நாம எப்படி இருக்கறது என்றது . இவர்களின் உரையாடலை கேட்ட நிலாவிற்கு தலைவலி தான் வந்தது. என்றுமே மனமும் மூளையும் ஒரே கருத்தை ஆதரிக்கும் போது எந்த ஒரு பிரச்னையும் இருக்காது. அதுவே இவை இரண்டும் வெவ்வேறு கருத்தை கூறும் பொது நமக்கு தலை வலி தான் மிஞ்சும் அது போல தான் நீத்துவுக்கும் தலை வலி வந்தது. இந்த பட்டிமன்றத்தை அப்போதைக்கு ஒத்தி வைத்தவள் சூடாக தேனீர் அருந்தி பின் தான் படுக்கையில் விழுந்தால். என்னதான் அம்மா அப்பாவிடம் சண்டையிட்டு வந்தாலும் நினைவுகள் அனைத்தும் அவர்களை சுற்றியே இருந்தது. அவள் வீட்டை விட்டு வந்த நிகழ்வு அவள் கண் முன்னே வந்து நின்றது.

ஜானகி தன் அம்மாவிடம் சண்டையிட்டு கொண்டிருக்கும் போது எதர்ச்சியாக அதை கேட்டு விட்டால் நித்திலா ''அம்மா பாட்டி என்னே சொல்லறாங்க நா உன்னோட பொண்ணு இல்லையாமே சொல்லுமா? நா உன்னோட பொண்ணு தான''. என்றாள் அழுகையுடனும் பதட்டத்துடனும். தன் மகளுக்கு எந்த விஷயம் தெரியவே கூடாது என்று நினைத்துஇருந்தனரோ அந்த செய்தி தன் வாயாலே அவளுக்கு தெரிந்ததை எண்ணி வேதனை கொண்டார் ஜானகி எனினும் நித்திலாவிடம் ''இல்லடா நீ எப்போவுமே என் பொண்ணு தான் நீ போ பொய் பிரெஷ் ஆகு'' என்று அனுப்ப நினைத்தார். அதற்குள் ருக்குமணி அம்மாள் ''ஜானகி இங்க பாரு அவளே கேட்டுட்டா இனி எதுக்கு மறைக்கற அவகிட்ட உண்மையா சொல்லிடு'' என்றார்.

 உடனே ஜானகி தான் தாயிடம் ''அம்மா நீ கொஞ்சம் சும்மா இருக்கியா உன்னால தான் இப்போ பிரச்சனையே உன் வை கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்காதா '' என்றார். ''ஆமா என்னோட வாயை அடைங்க அவகிட்ட மட்டும் யாரும் எதுவும் சொல்லிடாதீங்க'' என்றார் வீம்பாக. ''அம்மா பாட்டி என்ன சொல்லறீங்க இப்போ உண்மையா சொல்லரிய இல்லையா'' என்றாள் அழுகையுடன்.

''நித்துமா நா சொல்லறதை கொஞ்சம் பொறுமையா கேளு undefined எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு மூணு வருசமா குழந்தையே இல்ல டா. அப்போ நா ரொம்ப மன உளைச்சல இருந்தேன் undefined அப்பப்போ நிம்மதிக்காக பக்கத்துல இருந்த ஆஸ்ரமத்துக்கு போயிட்டு அப்பப்போ வருவேன் அப்போ தான் உன்ன பாத்தேன் உன்ன பாத்ததுமே எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு அப்போ நீ வெறும் மூணு மாச குழந்தை தான் அப்போ தான் எனக்கு தோணுச்சு உன்னைய என்னோட பொண்ணாவே பாத்துக்கணும் அதுக்கு அப்பறமா உங்க அப்பாகிட்ட பேசி நாங்க உன்ன எங்க குழந்தையை தத்து எடுத்துகிட்டோம். நீ வந்ததுக்கு அப்பறம் தான் எங்களுக்கு ஒரு நம்பிக்கையே வந்துச்சு. நீ வந்து மூணு வருஷம் கழிச்சி தான் நிக்கிலா பிறந்ததா எல்லாமே நீ வந்த அதிர்ஷ்டம் தான் டா. இப்போ கூட இத சொல்லணும்னு எங்களுக்கு இஷ்டம் இல்லை நீ கேட்டுனு தா நா சொன்னேன். மத்தப்படி நீ எப்பவுமே என்னோட பொண்ணு தாண்ட நீத்து''என்றார் அழுகையுடன். தன் அன்னை சொன்னதை கேட்டதும் அவளுக்கு அழுகை அடித்து கொண்டு வந்தது. இருப்பினும் இருகிய முகத்துடன் அமர்ந்தவள் ''நான் ரெடியாகிட்டு வரேன் நீங்க உங்க கணவரோட இருங்க நா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்'' என்றதுடன் சென்று தனது குளியலறையில் நீருக்கு அடியில் எவ்வளவு நேரம் இருந்தால் என்று தெரியவில்லை, எவ்வளவு அழுதாள் என்று அவளே அறியவில்லை. ஒரு முடிவுடன் வந்தவள் நேராக தாய் மற்றும் தந்தையிடம் சென்று ''இதனை நாள் என்னை நல்ல பாத்துக்கிட்டதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இருந்தாலும் எனக்கு ஒரு உதவி வேணும் இத மட்டும் செஞ்சிடுங்க எனக்கு காலேஜ் படிக்க சீட் மட்டும் வாங்கி குடுங்க போதும் நா வேற எதுவும் கேக்கலை. அப்புறம் இனி உங்களுக்கு நிக்கிலா மட்டும் தான் பொன்னு நன் இல்ல என்னை இனி மறந்துடுங்க எடுக்கவும் என்னைய தேடி வர கூடாது'' என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று முடங்கி கொண்டால். அவளால் தான் யாரும் அற்றவள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.

{நினைவுகள் தொடரும்.....)

One comment

  • :Q: nithila pesurathu sari illaiye facepalm but mananilai pesa vaikkuthu. :thnkx: & :GL: eagerly waiting 4 next epi.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.