என் கனவு சிறகுகளின்
மென்மையாய் அவள் மனது.
கற்பனைகளை வடிவமைக்கும்
துடிப்புடன் அவள் வயது.
ஏனாடா உன் கண்களில்
இன்று உப்பு கரிக்கும் கண்ணீர்?
விடியலில் மலரும்
என்னுடைய ஒவ்வொரு பொழுதும்
என்றும் உனக்காகவே.
கனவுகளின் ஒளியினில்
நித்தமும் ஒளிரும் உன் சிரிப்பினில்
நான் வாழ்கின்றேன் உனக்காகவே.