(Reading time: 11 - 21 minutes)

"தேங்க்ஸ்" என்று நந்தன் சொல்ல அவனை புரியாத பார்வை பார்த்தாள் "எனக்கு இந்த நாள் ரொம்ப ஸ்பெஷலா இருக்க போகுது..." என்றவனிடம் "ஏன் அப்படி சொல்றிங்க....?" என்று ஏதோ ஆர்வத்தில் பிரியா கேட்டுவிட "பின்ன மனசுக்கு பிடிச்ச பொண்ணு கையால எழுந்ததும் காபி குடிக்கிற சுகம் இருக்கே....." என்று நந்தன் ஒரு வித மோன நிலையில் பேசிக்கொண்டே போக அவளையும் அறியாமல் செங்கொழுந்தாய் சிவந்துபோனாள். 

 

நந்தனின் பக்கம் சாய்ந்த மனதை வெகு சிரமப்பட்டு அடக்கியவள் "நான் கீழே போறேன்....." என்று வேகமாய் படியிறங்க அந்நேரம் சரியாய் நாந்தனின் அலைபேசியில் 

 

"பூங்கதவே தாழ் திறவாய் 

பூங்கதவே தாழ் திறவாய் 

பூவாய் பெண் பாவாய் 

பொன் மாலை சூடிடும் 

பூவாய் பெண் பாவாய் 

பூங்கதவே தாழ் திறவாய்"

 

என்று பாட அதன் வரிகளை ரசித்தபடியே சென்றுவிட்டாள். நந்தன் தான் கைப்பேசியில் அந்த பாடலை ஒலிக்கவிட்டிருந்தான்.

அவள் படியிறங்குவதை பார்த்துக்கொண்டிருந்த நந்தனோ "இப்போ அம்மா சொன்னாங்கனு என்னோட ரூம்க்கு வந்த உன்னை சீக்கிரம் உரிமையோடு வரவைக்குறேன்..." என்று நினைத்து சிரித்துக்கொண்டான். 

 

சமையலறை புகுந்த ப்ரியாவை அகல்யாவே வரவேற்றார் "வா டா உனக்கு அந்த ரூம்ல டிரஸ் வைச்சு இருக்கேன். போய் குளிச்சுட்டு வா பூஜை முடிச்சுட்டு சாப்பிடலாம்" என்று அவசரப்படுத்தினார். நந்தனிடம் பேசிவிட்டு வந்தவள் அந்த யோசனையிலே விட்டால் போதும் என்று அவள் இருந்த அறையை நோக்கி ஓடிவிட்டாள். ஹாலில் இருந்த அனைவரும் அகல்யாவை "என்னது பூஜையா.... எங்ககிட்டலாம் சொல்லவே இல்ல ...." என்ற ரீதியில் பார்க்க பிரியா குளிக்க சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு "எல்லாரும் போய் குளிச்சுட்டு.... கோவிலுக்கு போகிறமாதிரி ரெடி ஆகி வாங்க...." என்று ஏதோ தகவல் சொல்வதை போல கூறினார். 

 

"என்னமா விசேஷம்???" என்று கேட்ட சக்திவேல் தாத்தாவிடம் "என்னனு சொன்ன தான் வருவீங்களா???" என்று அகல்யா அமர்த்தலாய் கேட்க.... "இல்ல இல்ல மா... இதோ கிளம்பிட்டேன்" என்று பயந்தவராய் தன்னறைக்கு சென்றுவிட்டார். "டேய் ஆதி உனக்கு வேற தனியா சொல்லனுமா போடா...." அன்று அவனையும் விரட்டிவிட்டு தன் கணவனிடம் ரூம்க்கு வாங்க மாமா என்று சொல்லி முன்னே நடந்தார் அந்த வீட்டின் சர்வாதிகாரி. 

 

சத்திவேலை கண்டாலே மிரண்டு ஓடுபவர்களின் மத்தியில் அவரே ஒருவருக்கு பணிந்தால்..... உண்மையில் அகல்யா சர்வாதிகாரி தானே..... மனைவியை இழந்த சக்திவேல் தன் மகன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து வைத்து... அகல்யாவின் கையில் குடும்ப பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு இன்று அவரின் அன்பால் உயிர்ப்புடன் ஒரு குடும்பத்தில் அடங்கி வாழ்கிறார். 

 

அனைவரும் தயாராகிக் கொண்டிருக்க டாக்டர் நந்தகோபாலன்..... டாக்டர் நந்தகோபாலன்...... என்று அந்த வீடே அதிரும்படியான குரலை கேட்டு அனைவரும் அங்கு கூடிவிட்டனர். 

 

 

(மகிழ்ந்திரு)

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.