(Reading time: 1 minute)

வானில் ஒளிரும்
வெண்ணிலவின் ஒளியாக
வாழ்வின் உச்சத்தில் நீ
என்னுடன் இணைந்தாய்
கண்களில் திரண்டிடும்
கண்ணீர்த் துளிகளுடன்
காவியமாய் கலந்தாய்
உன்னுயிரின் பிம்பமாய்
எனக்குள் ஊடுருவிடும்
இனிய பொழுதுகளுக்கு
உச்சி நிலாவின் கதிர்களில்
செய்திகள் பல நூறு
வாசித்திடும்
காதல் வாசகியாய் நான்
போதுமா உனக்கு
இது இப்போது!

2 comments

  • சூப்பர்! சொற்களை படிக்கும்போது அந்த மனநிலைக்குப் போய் கவிதையை ரசித்து மகிழ்ந்தேன்! பாராட்டுக்கள், சகோதரி!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.