(Reading time: 10 - 19 minutes)

"மா நான் எதுக்கு?? இப்போ தான வந்தேன் எனக்கு டயர்டா இருக்கு நான் வரல மா...." அந்த நேரத்தில் யாழுக்கு பூஜை பற்றிய நினைவு மட்டுமே இருந்தது. தாத்தா முதலில் கூறிய வாக்கியம் கிணற்றினுள் போட்ட கல்லாய் உள்ளே சென்றுவிட்டது. இல்லையென்றால் அவளுக்கு உறக்கம் ஏது??? தன்னிடம் ஒரு நண்பனாய் சண்டையிடும் தன் அண்ணன் மீராநந்தனை அன்று முழுவதும் கலாய்த்தே கொன்றிருப்பாள். "கொஞ்ச நேரம் தான் யாழ்... முடிச்சுட்டு வந்து எவ்ளோ வேணும்னாலும் ரெஸ்ட் எடுத்துக்கோ... போய் கிளம்பு.." என்று கண்டிப்புடன் கூறிய அன்னையிடம் இனி தன் பேச்சு எடுபடாது என்றுணர்ந்தவள் தந்தையிடம் முறையிட ஆரம்பித்தாள். 

 

"ப்பா நான் தூங்க போறேன் அம்மா கிட்ட சொல்லு ப்பா" என்று தலையை ஒருபுறம் சாய்த்து கண்களை சுருக்கி கெஞ்சிய மகளிடம் என்றும் போல் இன்றும் அவரது மனம் சாய்ந்தது. நந்தகோபாலனோ "விடு மா... இப்போ தான வந்து இருக்கா... ரெஸ்ட் எடுக்கட்டும். அது தான் நாம எல்லாம் இருக்கோமே....." என்று மகளின் தலையை வருடியபடியே அவளுக்காக மனைவிடம் பரிந்து பேசினார். "இப்படியே செல்லம் குடுத்து அவளை நல்லா கெடுத்து வைச்சு இருக்கீங்க மாமா" என்று சலிப்புடன் பேசிய அகல்யா "என்னமோ பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு "தமிழ்... நீ வா நாம போய் எல்லாம் எடுத்துவைக்கலாம்" என்றபடி அங்கிருந்து நகர்ந்து விட்டார். 

 

"தேங்க்ஸ் ப்பா" என்று எழுந்த யாழ் தன் தாத்தாவிடம் "சக்தி நீ எவ்வளவு பெரியா ஆளா இருந்தாலும் அது இந்த வீட்டுக்கு வெளிய தான்.... மறுபடியும் அம்மாவை போட்டு கொடுத்த உனக்கு சாப்பாடு கிடைக்காது...." என்று கண் சிமிட்டி சிரித்தாள். அவளை முறைக்க முயன்று அது முடியாமல் போக தன் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டார் சக்திவேல். தன் பேத்தியின் மூலம் வாழ்வின் வசந்தத்தை காண்கிறார் அல்லவா அவரால் எப்படி யாழிடம் கோபத்தை காட்ட முடியும். 

 

தமிழிடம் சென்று "அண்ணி... சீக்கிரம் போய் உங்க மாமியை கூல் பண்ணுங்க ரொம்ப சூடா இருக்காங்க...." என்று பேச "எல்லாம் உன்னால தான் டி வாலு..." என்று அவளுக்கு வலிக்காதபடி தலையில் ஒரு கொட்டு வைத்தார் முத்தமிழ். அருகில் இருந்த ஆதியிடம் தலையை தேய்த்தபடியே "அண்ணா..." என்று சிணுங்கியவளை கண்டு அந்த அண்ணனான தந்தையும் "ரொம்ப வலிக்குதா டா...." என்று உண்மையான அக்கறையில் கேட்டான். 

 

அதை பார்த்துக்கொண்டிருந்த நந்தன் தான் "யப்பா இவளோட நடிப்புக்கு ஆஸ்கார் விருதே குடுக்கலாம் டா சாமி...." என்று போலியாய் முறைத்துக்கொண்டிருந்தான். 

 

(கதை முழுதும் ஆதிநந்தன் ஆதியாகவும் மீரா நந்தன் நந்தனாகவும் வலம் வருவார்கள் ) 

 

"சும்மா இரு நந்து...." என்று தன் தம்பியை அடக்கிய ஆதி "நீ போய் ரெஸ்ட் எடு டா... ஈவ்னிங் பேசலாம்" என்று யாழிடம் கூற நந்தனுக்கு பழிப்பு காட்டிவிட்டு தன்னறைக்கு சென்றுவிட்டாள் யாழ். 

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.