(Reading time: 10 - 19 minutes)

எதை எதையோ யோசித்தவளுக்கு தலை வலிக்க ஆரம்பிக்க தலையை இரு கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தாள். அவளது நிலையை உணர்ந்த நந்தன் "என்ன பண்ணுது கிருஷ்ணா....???" என்று கேட்டு அதுவரை காரில் நிலவிய நிசப்தத்தை குறைத்திருந்தான். 

 

தன் நிலையை எண்ணி கழிவிரக்கத்தில் உழன்றுக்கொண்டிருந்தவள் தன்னை இந்த நிலையில் நிற்க வைத்தவன் அவன் தானே..... என்னை அவன் வீட்டுக்கு கூட்டிட்டு வராம இருந்து இருக்கலாமே.... அவள் வீட்டிற்கு சென்றிருந்தால் பிரியா அகல்யாவை பார்த்திருக்க மாட்டாளே.... அகல்யாவின் சொல்லிற்கு கட்டுபட்டிருக்க மாட்டாளே.... அவனது குடும்பம் அவளை அறிந்திருக்க வாய்ப்பில்லையே..... எல்லாம் அவனால் தான் வந்தது என்று கோபமும் வர "உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று ருத்ரகாளியாய் கண்கள் சிவக்க அவனை ஏறிட்டு பார்த்தாள். 

 

ஏனோ மருத்துவமனையில் அவளாக சென்று நந்தனைப் பார்த்ததோ, அவனிடம் ஆறுதல் தேடியதோ, வானதியை பற்றி கூறியதையோ அவள் மறந்திருந்தாள்.... அனைத்திற்கும் காரணம் அவள் அன்றோ... அவள் நந்தனைக் சென்று பார்த்திருக்கா விட்டால் அவனுக்கும் அவளை பற்றி அன்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லையே. பாவையவள் இதை உணராமல் நந்தனின் மேல் கோபம் கொள்ள... அவனோ ஒன்றும் புரியாமல் முழித்துக்கொண்டிருந்தான்.

 

நான் இப்போ என்ன கேட்டுட்டேனு இவ இப்படி குதிக்குறா என்று நினைத்தவன் "தலை வலிக்குதா..... வேனுனா வீட்ல விட்டுடுறேன்.... இன்னைக்கு முழுசா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு ஜாயின் பண்றியா??? என்று கேட்க "என் வாழ்க்கைல எதையுமே நான் செலக்ட் பண்ண கூடாதா.... எல்லாமே நீங்க சொல்றது தான் நடக்கணுமா.....?" என்று கோபம் சற்றும் குறையாமல் இரு பொருள் பட கேட்டாள் பிரியா. 

 

அவளது கேள்வியில் திடுக்கிட்டவன் சட்டென காரை நிறுத்தி இருந்தான்.

 

( மகிழ்ந்திரு)

 

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.