(Reading time: 4 - 7 minutes)

                 புகைப்படம்

 

 கல்லூரியின் முதன்மை பேராசிரியரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. 

அதில், குடும்பத்தின் வருட வருமானம் ஐம்பது ஆயிரத்திற்கு கீழ் உள்ள மாணவர்கள் மீ.கா நினைவு ஊக்கத்தொகை படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், அதிலிருந்து மிகக் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பத்தினரை தேர்ந்தெடுத்து பத்தாயிரம் ரூபாய் காசோலை வழங்கப்படும் என்று எழுதியிருந்தது. 

மொத்தமாக எங்கள் கல்லூரியில் இருந்து நானூற்று பதிமூன்று படிவங்கள் விண்ணப்பிக்கப்பட்டன. 

பிப்ரவரி மாதம் என்பது இயற்கைக்கு மட்டுமல்ல கல்லூரிகளுக்கும் வசந்த காலம் தான்,  இதுவரை அந்த ஆண்டில் நடந்த அனைத்து விதமான போட்டிகளுக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற்ற பெற்றவர்களுக்கும் என, அனைவருக்கும் கல்லூரி ஆண்டு விழாவில் தான் பரிசலிக்கப்படும். 

நடனம்,கவிதை, பேச்சுப் போட்டி என அனைவரும் அவர்களது திறமையை வெளி படுத்துவதற்கான களம் என்பதால் அந்த மாதத்தில் வகுப்புகளே இருக்காது. 

அன்று நடனப்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, ராமுவை  பேராசிரியர் தனியாக அழைத்துச்சென்று ஏதோ...பேசினார். 

அவன் திரும்பி வந்ததும் 

என்ன ரகசிம் என்று ஆர்வமாக கேட்டேன்.. 

மீ.கா ஊக்கத்தொகை எனக்கு தான் கொடுக்கப் போபோராங்களாம் .

 இந்தாண்டு எப்படி கல்வி கட்டணம் செலுத்துவது என்ற பயத்திலே இருந்தேன். 

அப்பா, இந்த பணத்தை சம்பாதிக்க ஐந்து மாதங்களாவது ஆகும் என்று மெதுவாக கூறினான். 

தோழில் தட்டிக் கொடுத்து விட்டு மீண்டும் எங்கள் பயிற்சியை தொடங்கினோம்.

ஆண்டு விழாவிற்கு பிரபலமான நடிகர் வர இருப்பதால் ஊர் முழுவதும் எங்களுடைய விழாவை பற்றிய பேச்சு தான்.

 முகம் தெரியாதவர்கள் எல்லாம் விழாவைப் பற்றி பேசும் போது, மிகவும் உற்சாகமாக இருக்கும். 

விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே ராம் கல்லூரிக்கு வரவில்லை.

அலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை, வீட்டிற்கு சென்று பார்த்த போதும் அவன் இல்லை. 

விழாவிற்கு வருவானா? அவனுக்கு என்ன ஆனது என்ற குழப்பத்திலே அனைவரும் இருந்தோம். 

நடனப் போட்டியில் அவனுக்கு பதிலாக சதிஷ் களந்து கொண்டான்.

 போட்டி முடிந்ததும் நடனமாடிய அனைவரும் மேடை முன் உள்ள இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்தோம். 

அருகிலேயே மெளனமாக உட்கார்ந்திருந்தான் ரமேஷ். 

என்ன ஆச்சு? ஏன் கல்லூரிக்கு வரவில்லை? என்று கேட்டதற்கு பதில் கூறாமல் அமைதியாக தலை குணிந்தபடியே இருந்தான். 

இதுவரை பாட்டு, நடனம், கைதட்டுகள் என சத்தமாக இருந்த விழா, மீ.கா ஊக்கத்தொகை அறிவிப்பு வந்ததும் அமைதியானது.

மேடையில் உள்ள பெரிய திரையில் ரமேஷின் குடும்ப நிலை ஒரு ஆவணப்படமாக வெளியிடப்பட்டது. 

அந்த காணொளியில் ரமேஷின் அம்மா, முதலில் கண்ணீர் குரலில் சிறிது நேரம் பேசிய பிறகு அப்பா, அவர்களின் குடும்ப நிலையையும், கஷ்டங்களையும் எடுத்து கூறினார். 

முடிவில் ரமேஷ் வுக்கு ஆசிரியர் எழுதிக் கொடுத்த வசனங்களை கண்ணீருடன் ஒப்பித்து விட்டு, மீ.கா குழுமத்திற்கு நன்றி என கையெடுத்து கும்பிட்டான். 

காணொளி முடிந்ததும் காசோலை வாங்குவதற்காக ரமேஷை மேடைக்கு அழைத்தனர். 

ஏதோ ஒரு சிந்தனையில் முகத்தில் வியர்வை வடிய அமைதியாக உட்கார்ந்திருந்தான். 

அவனை எழுப்பி மேடை வரை அழைத்துச் சென்றேன். மெல்லமாக மேடை ஏறினான். 

அப்போது விழாவே மையான அமைதியாக இருந்தது. 

தலை குணிந்தபடியே காசோலையை வாங்கிக் கொண்டு திரும்பும் போது முதன்மை ஆசிரியர் அவனின் கையைப் பிடித்து புன்னகையுடன், புகைப்படம் எடுக்கனும் ரமேஷ் சற்று நில்.. என்று சிரித்துக்கொண்டே, கொடுத்த காசோலையை வாங்கி மீண்டும் அவனிடம் கொடுத்தார்.

 புகைப்படம் வெளியே வைக்கப் போவதால் அழகாக எடு பாஸ்கர்.. என்று அந்த புகைப்படக் கலைஞரிடம் ஜாடை காட்டினார். 

ராமு புகைப்படத்திற்கு உணர்ச்சி இல்லாத பிணம் மாதிரி நின்றான். 

மேடையை விட்டு இறங்கும் போது கூனிக் குருகிக் கொண்டு இறங்கினான்.

இமையில் கண்ணீர் வடிந்த போதும் துடைக்காமல் மெதுவாக வந்து அருகில் அமர்ந்தான்.

 இதற்கு ஐந்து மாதம் அப்பா செருப்பு தைத்து வரும் பணத்திலே கட்டணம் செலுத்தி இருக்கலாமென்று தலை குணிந்தபடியே கூறினான் . 

 

2 comments

  • இதற்கு தான் கூறுவார்கள், வலது கை கொடுப்பதை இடது கை கூட அறியாத வண்ணம் கொடுக்க வேன்றும் என்று..
  • பாராட்டி முதுகில் தட்டிக்கொடுத்தால், அது முதுகிலிருந்த புண்ணில் பட்டு வலித்ததுபோல உள்ளது, பிரமாதம்! நம்மை அறியாமல் பிறர் மனதை இப்படித்தான் புண்படுத்தி விடுகிறோம்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.