(Reading time: 1 - 2 minutes)

ஒற்றையடிப் பாதை பயணமிது...

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே

பலபிரிவு கொண்ட வழி இங்கே...

துணையாய் யாரும் வருவதில்லை...

முன்னே பின்னே வந்தாலும்

பாதியில் தொலைந்து போய்விடுவார்...

உனக்கான வழியிலே 

உறுதுணை தேடாதே...

உயிர் ஒன்றை தவிர

உடன் வருவது ஏதுமில்லை...

இடை வந்து இணைவோருக்கு

இன்னல் நீ செய்திடாதே..

இடையூறு செய்வோரை

இன்முகமாய் வென்றிடு...

உயிர் அறுக்கும் துரோகிகளுக்காய்

உன்னை நீ வருத்தாதே...

முள்ளோ கல்லோ உன் வழியில்

முயற்சி ஒன்றை இழந்திடாதே...

திரும்பி செல்ல வழியில்லை

துவண்டு நீ நின்றிடாதே...

எடுத்து வைக்கும் அடி ஒவ்வொன்றிலும்

உன் பாதச்சுவடு படியும்படி

உறுதியாய் ஊன்றிடு...

உலகமே உன் காலுக்கடியில்....

 

4 comments

  • Dear Jeba! இன்று காலை மறுபடியும் தங்கள் கவிதையே படித்தேன். ஆகா! இதைவிட ரத்தினச் சுருக்கமாக வாழ்வை எவராலும் கூறிவிட முடியாது!
  • Good morning dear Jeba! காலையில் எழுந்ததுமே, தங்கள் கவிதையை படித்தவுடன் பகவத் கீதையிலும் பிடித்ததுபோல் உள்ளது. தாங்கள் சொல்லியிருப்பதே வாழ்க்கை! 'ஒற்றையடிப் பாதை' என்ன அற்புதமான பொருத்தமான தலைப்பு! குறைந்த வயதிலேயே இவ்வளவு ஞானமாகிய என வியக்கிறேன். அருமையான கவிதை! தினமும் ஒரு கவிதை, முடிந்தால் கொடுங்கள்! என் எஞ்சிய காலத்துக்கு அருமருந்தாக அமையும்! மிக்க நன்றி! இந்த நாள் இனிய நாள்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.