(Reading time: 8 - 16 minutes)
Irulum oliyum
Irulum oliyum

மெள்னமாக இருந்த ராஜமையர், பெண்ணை அன்புடன் கடிந்து கொண்டார். அதிக அவசியம் நேர்ந்தாலன்றி அவர் பேசமாட்டார். தாய்க்கும், தம் மனைவிக்கும் ஏற்படும் மனஸ்தாபங்களைக்கூட அவர் காதில் போட்டுக் கொள்வதில்லையே!

ஒரு குடும்பத்தில் எஜமானனுடைய நிலைமைதான் மிகவும் பரிதாபமானது. ஏனெனில், மாமியார் - மருமகள் சண்டையில் யாருக்குச் சமாதானம் கூறுவது என்பது மிகவும் கடினமான பிரச்னை. "பெற்று வளர்த்து நான் கஷ்டப்பட்டது எனக்கல்லவா தெரியும்? நேற்று வந்தவள் வைத்தது 'சட்டமாகி விட்டது. இந்த வீட்டில்என்பாள் மாமியார். - "அன்பும் ஆதரவும் வேண்டுமென்று பெற்றோர், உற்றோரை எல்லாம் விட்டுவிட்டு இவரே கதி என்று வந்திருக்கிறேனே; என் மனசை ஏன் இப்படிப் புண்ணாக அடிக்கிறார்கள்?" என்பாள் மருமகள். பெற்ற தாயும், வாழ்க்கைத் துணைவியும் குடும்பத் தலைவனது அன்புக்குப் பாத்திரமானவர்கள். இது கடினமான - பிரச்னை தானே?

நாளடைவில் பாட்டியின் சண்டை - சச்சரவுகள் சகஜமாகி விட்டன. மங்களத்தின் மனம் மறத்துப் போய்விட்டது. இரண்டு வேளை சாப்பாடு ஜீரணமாகிறமாதிரி மாமியாரின் கடுஞ் சொற்களையும் ஜீரணித்துக்கொண்டாள் மங்களம். தாய்க்கு ஏற்பட்டிருந்த சகிப்புத் தன்மையில் ஓர் அணு அளவு கூட சாவித்திரிக்கு இல்லை. அவள் குழந்தைப் பருவத்தில் பாட்டியும், அம்மாவும் சண்டை பிடித்துக் கொண்டதெல்லாம் பசுமரத்தாணி போல் சாவித்திரியின் மனதில் பதிந்து போயிருந்தது. பாட்டி, அம்மாவை ஓட ஓட விரட்டியமாதிரி தானும் விரட்டினாள். எடுத்த்தெற்கெல்லாம் 'ஹடம்' பிடித்தாள். அதைப் பாட்டியின் சலுசையால் சாதித்துக்கொண்டாள்.

ராஜமையர் சாவித்திரியைக் கடிந்து கொண்ட பிறகு சிறிது நேரம் எல்லோரும் மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சாவித்திரிக்குக் கோபம் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டிருந்தார்கள். 'கடு கடு' வென்று முகத்தை வைத்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் அவள் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்த சீதா, "யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, எனக்கு ஸரஸ்வதியை ரொம்பவும் பிடிக்கிறது. சிரித்துச் சிரித்துக் கபடம் இல்லாமல் பேசுகிறாளே" என்றாள்.

உனக்கு யாரைத்தான் பிடிக்காது? எல்லோரையும் பிடிக்கும்!" என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டுச் சாப்பிடும் தாலத்தை 'நக்' கென்று நகர்த்திக்கொண்டே அவ்விடம்விட்டு எழுந்தாள் சாவித்திரி.

இதுவரையில் இவர்கள் சச்சரவில் தலையிடாமல் இருந்த மங்களம் சலிப்புடன், "என்ன சண்டை இது, சாப்பிடுகிற வேளையில்? அரட்டை அடிக்காமல் ஒரு நாளாவது சாப்பிடுகிறீர்களா?" என்று கோபித்துக்கொண்டாள். அதற்குமேல் எல்லோரும் கப்சிப்பென்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.