(Reading time: 7 - 14 minutes)
Irulum oliyum
Irulum oliyum

டில்லியில் அரிசி வாங்கினாள் என்று கேட்க வேண்டும்போல் இருக்கிறதா உனக்கு?" என்றான் சந்துரு.

"ஆமாம், ஆமாம்; பாலம் கொஞ்சம் பருத்துத் தான் இருக்கிறாள்" என்று தலையை ஆட்டிப் பிள்ளை கூறுவதை ஆமோதித்தார் ராஜமையர்.

”சரி, சரி, மணி ஆகிறது. அவாள் எல்லாம் சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சோ? எழுந்து ஸ்நானம் செய்யப் போகட்டும்" என்று கூறி மங்களம் உள்ளே சென்றாள்:

சாப்பாடு முடிந்த பின்னர் பாலம் சாவித்திரிக்காக வாங்கியிருக்கும் வெள்ளிப் பாத்திரங்கள், புடைவைகளைப் பார்வை யிட்டாள். வெள்ளியில் வாங்கியிருந்த குடத்தைப் பார்த்து விட்டு, "ஆமாம் மன்னி! குடம் பித்தளையில் வாங்குவது தானே? வெள்ளிக் குடத்திலா சாதாரணமாக நாம் ஜலம் கொண்டு வருகிறோம்?" என்று கேட்டாள்.

"அதென்னவோ அம்மா! பெட்டியிலே தூங்குவதற்காக எத்தனை புடைலைகள், நகைகள், பாத்திரங்கள் செய்தாக வேண்டுமோ? அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிட்டு மிகுதிப் பணத்தைப் பயனுள்ளதாகச் செலவழித்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். நாலு பேர் மெச்சிப் புகழவேண்டும் என்பதற்காகவே பணத்தை இப்படி விரயம் செய்யவேண்டி இருக்கிறது" என்றாள் மங்களம்.

"என்னதான் பணம் காசு இருந்தாலும் நம் கல்யாணத்தின் போதெல்லாம் இந்த மாதிரி டாம்பீகச் செலவு குறைவாகத்தான் இருந்தது; இல்லையா மன்னி? இப்படிக் கண்டபடி பணத்தை வாரி இறைக்கிறார்கள். சாப்பாட்டுப் பண்டங்களை அழ்க வைத்தும் ஊச வைத்தும் குப்பையிலே கொட்டுகிறார்கள். டில்லியில் ஒரு கல்யாணம் நடந்தது. தடபுடலாக ஒர வைபவமாகத்தான் நடத்தினார்கள். வந்தவர்கள் வந்தபடி இருந்தார்கள். ஆனால் அந்தக் கல்யாணத்துக்காக இரவு பகலாக உழைத்த வேலைக்காரர்களுக்கு நிறுத்துத்தான் சாப்பாடு போட்டார்களாம். பலகாரங்களைப் பூட்டிவைத்து ஊசிப்போன பிறகு எடுத்துக் கொடுத்தார்களாம்! எப்படி இருக்கிறது விஷயம்?" என்று ஆத்திரத்துடன் பேசினாள் பாலம்.

"அத்தை, டில்லிக்குப் போன பிறகு நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டு இருக்கிறாள். அடிக்கடி சட்டசபை கூட்டங்களுக்குப் போவாயாமே, அத்தை!" என்று கேலி செய்தாள் சாவித்திரி.

"என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேனே, முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டு. ஏண்டி சாவித்திரி! உனக்கு வரப்போகிற ஆத்துக்காரர் எப்படி இருக்கிறார்? சிவப்பா, கறுப்பா" என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்டாள் பாலம்.

"போ அத்தை! நான் சரியாகக் கவனிக்கவில்லை" என்று வெட்கத்துடன் கூறினாள் சாவித்திரி.

"பொய்யைப் பார் பொய்யை! இவள் மனசில் தான் என்ன இருக்கிறதோ? கேட்டுக் கொள் அத்தை. மாப்பிள்ளைக்குப் பாட்டு என்றால் ஆசையாம். இவளை அவர் பாடச்சொன்ன போது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.