(Reading time: 8 - 15 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 08 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 8பொறாமை

குபதியின் குடும்பத்தார் வசித்து வந்த ஊர், கிராமாந்தர வர்க்கத்தைச் சேர்ந்ததல்ல. நூறு பிராம்மணக் குடும்பங்களும் மற்ற வகுப்புக் குடும்பங்கள் ஐநூறு வாழ்ந்த அந்தச் சிற்றூரில் ஒரு பெரிய பள்ளிக் கூடமும், தபாலாபீஸும், அழகிய கோவிலும் இருந்தன. அவ்வூரில் வசித்துவந்த பிராம்மணக் குடும்பங்களில் பெரும்பாலோர் நல்ல ஸ்திதியில் இருப்பவர்கள். ரகுபதியின் தகப்பனார் அவன் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். ஊர் ஜனங்கள் நல்லவர்களாக இருந்ததால் பால்ய விதவையான ஸ்வர்ணாம்பாள் ஒருவித வம்புக்கும் ஆளாகாமல் அந்த ஊரிலேயே காலம் தள்ளி வந்தாள். ரகுபதி தாய்க்கு அடங்கிய பிள்ளை. ஆனால், தாயார் தான் பிள்ளைக்கு அடங்கி நடந்துவருவதாகச் சொல்லும்படி இருந்தது. பெரிய படிப்பெல்லாம் படித்துத் தேறிவிட்டு ரகுபதி வேலைக்குப் போகாமல் வீட்டுடன் இருந்தான்.

சிறு வயதில் ஸ்வர்ணாம்பாள் - நன்றாகப் பாடுவாள். அவள் குரலினிமைக்கு ஆசைப்பட்டே ரகுபதியின் தகப்பனார் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண் டாராம். அவரும் சங்கீதப் பித்துப்பிடித்த மனுஷன். இந்தக் காலத்தைப்போல் சங்கீத சபைகளும், நாடக மண்டலிகளும் அப்பொழுது அவ்வளவாக இல்லை. நல்ல சங்கீதத்தைக் கேட்க வேண்டுமானால் கோயில்களின் உற்சவகாலங்களிலும், பெரிய மனிதர்கள் வீட்டுக் கல்யாணங்களிலுமே முடியும். பெரிய வித்வான்களை அழைத்துக் கோயிலில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்வதோடு. அவர்களைத் தம் வீட்டிலேயே அழைத்து வேண்டிய சௌகர்யங்களைச் செய்து கொடுப்பார் ரகுபதியின் தகப்பனார். அவருக்கு வாய்த்திருந்த மனைவியும் அவர் எடுத்த காரியத்தில் பங்கெடுத்துக்கொண்டு சண்டை, பூசலுக்கு இடம் இல்லாமல் நடந்து கொண்டாள். பரம்பரையாக இருந்துவந்த சங்கீத ஞானம் ரகுபதியையும் பிடித்துக்கொண்டது. அவனும் தகப்பனாரைப்போலவே சங்கித விழாக்கள் நடத்தினான். அதற்காக நன்கொடைகள் கொடுத்தான்.

குழந்தைப் பருவத்திலிருந்து தாயை இழந்து தன்னுடன் வளர்ந்து வந்த ஸரஸ்வதிக்கும் அவ்வித்தையைப் பழுதில்லாமல் கற்பித்தான். தனக்கு வாய்க்கும் மனைவியும் அம்மாதிரி இருக்க பேண்டும் என்று அவன் ஆசைப்படுவது இயற்கையே அல்லவா?

அன்று கோழி கூவுவதற்கு முன்பே ரகுபதியின் வீட்டில் எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டார்கள். வேலைக்காரி, வரப்போகும் தன் புது எஜமானிக்காக விதவிதமாகக் கோலங்கள் போட்டு, செம்மண் பூசிக்கொண்டிருந்தாள். சமையலறையில் ஸ்வர்ணாம்பாளும், ஸரஸ்வதியும் காலை ஆகாரம் தயாரிப்பதில் முனைந்திருந்தனர். எவ்வளவுதான் பணம் காசில் மூழ்கி இருந்தாலும், சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ளும் வழக்கம் மட்டும் அவ்வூரில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.