(Reading time: 7 - 14 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 14 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 14. சீதாவின் உபதேசம்

ன்று சனிக்கிழமையாதலால் ராஜமையர் காரியாலயத்திலிருந்து பகல் ஒரு மணிக்கே வீட்டிற்கு வந்துவிட்டார். காசிக்குத் தன் பெண் பாலத்துடன் சென்றிருந்த அவர் தாயாரும் ஊரிலிருந்து முதல் நாள் தான் வந்திருந்தாள். இடைவேளைச் சிற்றுண்டிக்கு அப்புறம் கூடத்தில் உட்கார்ந்து வடநாட்டைப்பற்றிப் பாட்டி கூறுவதைக் கேட்டுக்கொண்டு. இடை யிடையே அவளைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள்.

"பாட்டி! காசிக்குப் போனால் ஏதாவது அவரவர்களுக்குப் பிடித்த பண்டத்தை விட்டுவிடவேண்டும் என்று சொல்லுகிறார்களே. நீ காப்பியை விட்டுவிட்டாயா பாட்டி?" என்று சீதா சிரித்துக்கொண்டே கேட்டாள்.

சே. . சே... காப்பியை இன்னும் ' ஸ்ட்ராங்'காகச் சாப் பிடுவது என்று சங்கல்பம் செய்து கொண்டு வந்திருப்பாள் பாட்டி!" என்று சந்துரு கேலி செய்தான்.

"போடா அரட்டை! கொய்யாப் பழத்தையும், பாகற் காயையும் விட்டுவிட்டேன்" என்று பேரன், பேத்திக்குப் பதில் கூறினாள் பாட்டி.

அடி சக்கை! தினம் தினந்தான் கொய்யாப்பழமும், பாகற்காயும் நாம் சாப்பிடுகிறோம்? சரியாகத்தான் பார்த்துப் பொறுக்கி எடுத்திருக்கிறாய்?" என்றான் மீண்டும் சந்துரு.

"காயும், பழமும் விடவேண்டும் என்பது ஒன்றும் சாஸ்திரம் இல்லை. நமக்கு இருக்கும் பலவித ஆசைகளில் எதையாவது துளி அந்தப் புனித க்ஷேத்திரத்தில் விட்டுவர வேண்டும். ஆசா பாசங்களை ஒடுக்கவேண்டும் என்று பெரியவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்" என்றார் ராஜமையர்.

சற்று ஒதுப்புறமாக உட்கார்ந்திருந்த மங்களம், "ஏதாவது அரட்டை வேண்டுமோ இல்லையோ? சாவித்திரியிடமிருந்து கடிதம் வந்து பத்து தினங்களுக்கு மேல் ஆகிறது. யாரும் ஒரு வரி பதிலே போடவில்லை. உன்னை எழுதச் சொல்லி எத்தனை முறைகள் சொல்லி இருப்பேன் சதா?" என்று மகன் கோபித்துக்கொண்டாள்.

"இதோ வந்துவிட்டேன் அம்மா" என்று கூறி காமரா அறைக்குள் சென்று கையில் கடிதமும் உரையும் அவள் எடுத்து வந்தபோது தெருவில் வண்டி வந்து நின்றது. கையில் ஒரு சிறு பெட்டியை எடுத்துக்கொண்டு சாவித்தி மட்டும் இறங்கி உள்ளே வந்தாள். அடுத்தாற்போல் மாப்பிள்ளை ரகுபதி வருவான் என்று எல்லோரும் வாசற்பக்கத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டிக்காரன் காலி வண்டியைத் திருப்பிக்கொண்டு போன பிறகுதான் சாவித்திரி மட்டும் தனியாக வந்திருக்கிறாள் என்பது தெரிந்தது.

"என்னம்மா இது? நீ மாத்திரம் தனியாகவா வருகிறாய்?" என்று ஆச்சரியத்துடன் மகளைப்

3 comments

  • நிறைய பேர் இப்படித்தான் கணவன் செய்யும் தப்புக்கு பிரிந்து செல்வது / விவாகரத்து தான் சரியான முடிவு என நினைப்பர்.. அது கணவனுக்கு தண்டனையோ இல்லையோ தன் பெற்றோருக்கு தண்டனை தான். தன்னுடைய பெண்ணுக்கு தவறிழைத்தோமே என்ற குற்ற உணர்ச்சியே அவர்களை கொள்ளும். தன் புகுந்த வீட்டு குறைகளை பிறந்த வீட்டில் மறப்பதே புத்திசாலிதனம். தன் பெற்றோருக்காகவேணும்.........
  • இது கதையல்ல; மனித இயல்புகளிடையே நடக்கும் போர்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.