(Reading time: 7 - 13 minutes)
Irulum oliyum
Irulum oliyum

ஸரஸ்வதி.

ஆர்வத்துடன் அவளை விழுங்கிவிடுவது போல் பார்த்துக் கொண்டே ரகுபதி, "உனக்குத்தான் எப்படியோ பிறத்தியாருடைய மனசில் இருப்பதைக் கண்டு பிடிக்கத் தெரிந்து இருக்கிறதே! என் மனசில் இருப்பதைத் தெரிந்து கொண்டே எதற்கு.

என்னைக் கேட்கிறாய் ஸரஸு?" என்றான்.

ஸரஸ்வதி வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். பிறகு சட்டென்று விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்து. ”உன்னைவிட அத்தைதான் நாட்டுப்பெண் இன்னும் வந்து சேரவில்லையே என்று கவலைப்படுகிறாள். நல்ல வேளை! நான் சமையலறையில் இராமல் இருந்தால் ரவா சொஜ்ஜியில் உப்பை அள்ளிப் போட்டிருப்பாள்! ஆனால் உனக்கு அதுவும் தெரிந்திருக்காது. இது ஏதோ புதுமாதிரி பட்சணம்போல் இருக்கிறது என்று நினைத்துக்கொள்வாய். அத்தான்! அன்றொரு நாள் சாவித்திரி பொரிச்ச கூட்டு என்று சமைத்து வற்றல் குழம்பை உன் இலையில் பரிமாறினாளே; நீயும் அதைப் 'பேஷ்' என்று சொல்லி ஆமோதித்துச் சாப்பிட்டாயே; நினைவிருக்கிறதா உனக்கு? 'புருஷன், மனைவி வியவகாரத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும்' என்று நான், பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வெளியே போய்விட்டேன்" என்றாள் ஸரஸ்வதி. பொங்கி வரும் சிரிப்பை அடக்க முடியாமல் அவள் கலகல' வென்று சிரித்தபோது அந்தச் சிரிப்பின் ஒலி யாழின் இசை போலும், வேய்ங்குழலின் நாதம் போலும் இருந்தது ரகுபதிக்கு.

வர வர உனக்கு வாய் அதிகட்கிவிட்டது. நான் இருக்கிற சவரணைக்கு என்னைப் பார்த்துப் பரிகாசம் பண்ணுகிறாயே. சாவித்திரி என்னுடன் இருந்ததே ரொம்பக் காலம்! அதிலும் அவள் எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று என் மனத்தை அறிந்து உபசாரம் செய்தது அதைவிட அதிகம்! சமையலறையி பருந்து அம்மாவோ நீயோ காய்ச்சி வைத்த பாலை எனக்குக் பாலைக் கொண்டு வந்து மேஜைமீது மூடாமல் வைத்துவிட்டுப் போர்வையை இழுத்துப் படுத்துக்கொள்ளத்தான் தெரியும் அவளுக்கு. இன்பமும், ஆனந்தமும் நிறைந்திருக்க வேண்டிய அறையில் அழுகையின் விம்மலும், 'படபட' வென்று பொரிந்து வெடிக்கும் கடுஞ்சொற்களையும்தான் கேட்கலாம். என் படுக்கை அறைச் சுவர்களுக்கு வாய் இருந்தால். நான் ரசித்த காட்சியை அவைகளும் வர்ணிக்குமே, ஸரஸு!" என்ற ரகுபதியின் கண்கள் கலங்கிவிட்டன. ஸரஸ்வதியின் நெஞ்சைப் பிளந்து கொண்டு விம்மலின் ஒலி எழுந்தது.

'பிறர் துன்பத்தைத் தன்னுடைய தாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ஸரஸ்வதிக்குத் தன் அத்தானின் துன்பத் துக்கு எப்படிப் பரிகாரம் தேடுவது, அதைத் தான் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதே புரியவில்லை. சிறிது நேரம் அவள் யோசித்துவிட்டு மெதுவாக, "அத்தான்! நான் ஒன்று சொல்லுகிறேன் கேட்கிறாயா?

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.