(Reading time: 7 - 13 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 31 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 30. அழைக்காத விருந்தாளி

மைசூர் ராஜ்யத்தில் பார்க்க வேண்டிய இடங்களை அநேகமாகப் பார்த்து முடித்து விட்டாள் ஸரஸ்வதி. கோபாலதாஸர் வசித்து வந்த வீடும், அதன் சுற்றுப்புறங்களும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. சர்க்கார் அலுவலாக வந்திருந்த அவள் தகப்பனார், தம் வேலைகளை முடித்துக்கொண்டு விட்டார். தன் சகோதரியின் குடும்ப நிலையை இதற்குள் அவர் ஒருவாறு ஸரஸ்வதி சொல்லித் தெரிந்து கொண்டிருந்தார். அவர்களிடம் இனிமேல் ஸரஸ்வதி தங்கியிருக்க இயலுமா என்றும் கவலை அடைந்தார் அவர். ஆகையால் அவர் ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு, "ஏனம்மா! நீயும் என்னோடு வந்து விடுகிறாயா? வெளி நாடுகளெல்லாம் பார்த்தாற்போல் இருக்கும்என்று கூப்பிட்டார்.

ஸரஸ்வதி சிறிது நேரம் யோசித்துவிடு. "தீபாவளிப் பண்டிகைக்கு அத்தான் வேட்டகம் போயிருக்கிறான். அநேகமாக மனைவியை அழைத்து வந்து விடுவான். அத்தையிடம் சொல்லிக் கொள்ளாமல் எப்படியப்பா வந்து விடுவது?" என்று கேட்டாள். அதுவும் வாஸ்தவந்தான் என்று தோன்றியது அவருக்கு. மகளைப் பிரிந்து செல்லும்போது அன்புடன் அவள் தலையை வருடிக் கொண்டே, "அம்மா! எல்லாவற்றிலும் நீ புத்திசாலியாக இருக்கிறாய். உன்னிடம் ஒரே ஒரு அசட்டுத்தனம் இருக்கிறது. என் குடும்பத்தின் விளக்கே நீ ஒருத்திதான். இந்த விளக்கால் என் குடும்பம் ஒளிபெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இந்த ஒரு விளக்கிலிருந்து பல தீபங்களை ஏற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். உன் மனசுக்குப் பிடித்தவனாக யாரைச் சொல்லுகிறாயோ அவனை நான் ஏற்பாடு செய்கிறேன், ஸரஸ்வதி!" என்று உருக்கமாகக் கூறினார்.

ஸரஸ்வதியின் பளிங்குக் கன்னங்களில் கண்ணீர் உருண்டு வழிந்தது. ஆர்வத்துடன் தகப்பனாரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டாள் ஸரஸ்வதி. பிறகு உதடுகள் உணர்ச்சியால் துடிக்க, "அப்பா! நான் என்றுமே இப்படிக் கன்னியாக இருந்து விடுவேன் என்று கவலைப்படுகிறீர்களா? அப்படி யெல்லாம் நான் விரதம் ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. லட்சியப் பாதையில் செல்லுகிறவர்கள் வகுத்துக் கொள்ள வேண்டிய இல்லறமே வேறு. அத்தான் ரகுபதி ஒரு லட்சிய வாதி. இசை என்றால் ஆசைப்படுகிறவன். அவன் ஆரம்பித்த கபவாழ்வு இனிமையாக இல்லை. அவன் லட்சியம் ஈடேற அவன் மனைவி அவனுடன் ஒத்துழைக்க மறுக்கிறாள். அவனாவது தன் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அவளாவது அவன் வழிக்குத் திரும்ப வேண்டும். ஆகையால், நான் விவாகம் செய்து கொள்வதற்கு முன்பு யோசித்துத்தான் செய்து கொள்ள வேண்டும். அன்று கூறியதுபோல் நான் ஆண்டாளாக மாறி விடுவேன் என்று வருத்தப்படாதீர்கள். அவ்வளவு பக்தியும், மனத்தெளிவும்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.