(Reading time: 7 - 13 minutes)
Irulum oliyum
Irulum oliyum

படித்தாள்:

" அன்புள்ள ஸரஸ்வதிக்கு, ரகுபதி அநேக ஆசீர்வாதம். உன் மைசூர் பிரயாணமெல்லாம் முடிந்து எப்பொழுது நீ ஊருக்குத் திரும்பி வரப்போகிறாய்? உன்னுடன் ஒன்றாக ரெயிலடி வரையில் வந்த நான், என் தீர்மானத்தைத் தகர்த்தெறிந்து விட்டேன். மதிக்காத மனைவியைத் தேடிப் போவதைவிட, மதித்து என்னைத் தன் ஊருக்கு வரும்படி அழைத்த தங்கத்தின் வீட்டில் இப்பொழுது நான் இருக்கிறேன். நாளைப் பொழுது விடிந்தால் தீபாவளி. தீபாவளியும் இங்கேதான். அத்தை அலமு உனக்காக ரொம்பவும் பயப்படுகிறாள். ' நீ இங்கே விருப்பது தெரிந்தால் அந்தப் பெண் ஸரஸ்வதி என்னைப் பொசுக்கி விடுவாள்' என்று அடிக்கடி சொல்கிறாள்.

தங்கம் 'ஸரஸு அக்கா'வை மறக்களில்லை. உன்னிடம் கற்றுக்கொண்ட 'சின்னஞ்சிறு கிளியே- கண்ணம்மா'வைத் தினம் பாடுகிறாள். அந்தப் பெண்ணுக்குத்தான் என்ன சாரீரம் என்கிறாய், ஸரஸு! இறைவன் சிலருக்குத் தான் இந்த பாயத்தை அளிக்கிறான் போலும். தங்கத்துக்கு நிகமாகவே பூட்டிக்கொள்ள உடம்பில் தங்க நகைகள் இல்லையே தவிர, அவள் பசும் பொன் என்பதில் சந்தேகம் இல்லை.

மது நிறைந்திருக்கும் மலர்களைத்தான் வண்டு தேடிக் கொண்டு போகும். மதுவில்லாததும், வாசனை இல்லாததுமான மலர் இங்கே யாருக்கு வேண்டும்?"

ஸரஸ்வதியின் கண்கள் கோபத்தால் சிவந்தன; "அழகாக இருக்கிறது தங்கத்தைப் பற்றிய வர்ணனை! பாவம், பேதைப் பெண்!" என்றாள் ஸரஸ்வதி.

செந்தமிழை நன்றாகப் புரிந்துகொள்ள முடியாத கோபால தாஸர் கவலையுடன், "என்னம்மா இதெல்லாம்? ஊரிலே எல்லோரும் சௌக்கியந்தானே?" என்று விசாரித்தார்.

சீக்கிரத்தில் நான் ஊருக்குப் புறப்படுகிறேன், மாமா! கொஞ்சம் என் அத்தானுக்குச் சித்தப்பிரமை ஏற்பட்டிருக்கிறது. அதைப்போய்த் தெளியவைக்க வேண்டும்" என்றாள் ஸரஸ்வதி. அந்த அதிசயப் பெண்ணைப் பார்த்துக் கோபால தாஸர் மனத்துக்குள் வியந்தார்.

-------------

தொடரும்

Go to Irulum oliyum story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.