(Reading time: 7 - 14 minutes)
Irulum oliyum
Irulum oliyum

எல்லோரையும் மரியாதையாகக் கௌரவிக்கத் தெரியும் அவளுக்கு; நாலு பேரை மதித்து நாலு வார்த்தைகள் பேசத் தெரியும்; செய்துவிட்ட குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும் பண்பும் அவளுக்குத் தெரியும். பிறவியுடன் அறிவு பிறந்துவிடுகிறது. அதை வளர்க்கத்தான் கல்வி அறிவு பயன் படுகிறது. சிறந்த பண்பாட்டைப் பெண்கள் பெற அதற்கேற்ற குடும்பச் சூழ்நிலை அவசியமாகிறது. உள்ளத் தூய்மையும், அகந்தையற்ற தன்மையும் உள்ள பெரியவர்களிடை குழந்தைகள் வளர்ந்து வந்தால் அவர்கள் குணத்தை இவர்களும் அடை கிறார்கள். போலிக்கௌரவமும், ஒருவரையும் மதியாத சுபாவமும் நிறைந்த கூட்டத்தில் வளரும் குழந்தைகள், அந்த மனப்பான் மையைத்தான் வளர்த்துக் கொள்வார்கள். தப்பித் தவறி எங்கோ விதி விலக்காகச் சிலர் இருப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது.

தங்கத்தின் மனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அவ்வளவு கண்டிப்பும் நிறைந்திருந்தது. ஆரம்பத்தில் ரகுபதி அவளிடம் சகோதர அன்புடன் பழகி வருவதாக நினைத்திருந்தாள். வரவர அவன் பித்தனைப்போல் நடப்பதை அறிந்து பயந்தாள். 'தங்கத்தைத் தனியாகச் சந்தித்துப் பேசவேண்டும் என்கிற அவசியம் ரகுபதிக்கு இல்லை. அவளிடம் அவன் அந்த ரங்கமாகச் சம்பாஷிப்பதற்கு என்ன இருக்கிறது? எல்லோர் எதிரிலும் தாராளமாகப் பேசலாம். ஆனால், ரகுபதி அவளிடம் தனித்துப் பேச பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டான். ஏரிக்கரைக்குத் தங்கம் போனால் அங்கே அவனும் விரைந்தான்.. கிராமத்து வாலிபர்களைச் சுட்டுப் பொசுக்கும் தங்கம், ரகுபதி யோடு தனித்து உரையாடுவதை அவர்கள் பார்த்தால் சும்மா விடுவார்களா?’

ஒரு நாள் அதிகாலையில் ஏரியில் குளித்து விட்டுத் திரும்பும் தங்கத்தைக் கோவிலில் சந்தித்தான் ரகுபதி. குடலை நிறையத் தங்க அரளிப் புஷ்பங்களைப் பறித்து நிரப்பிக்கொண்டு வந்து நின்றிருந்தாள் தங்கம், பொழுது இன்னும் நன்றாக விடியவில்லை. அவளுக்கு மனசிலே ஆயிரம் குறைகள் உண்டு. அதைக் கோவிலில் வந்து தெய்வத்தினிடம் முறையிட்டுக்கொள்வது அவள் வழக்கம். அதைக் கலைப்பதற்கு வந்த ரகுபதியை அவள் அங்கே சந்திக்க விரும்பவில்லை.

" என்ன அத்தான்! இவ்வளவு காலையில் வந்து விட்டீர்கள்!" என்று சொல்லாமல் சொல்லி விளங்கவைக்தாள் தங்கம்.

"வந்துவிட்டேன்! வரக்கூடாதா தங்கம்? உன்னைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்."

வேடிக்கைதான்! பொழுது விடிந்து பொழுது சாய்வதற்குள் வீட்டிலே பல முறைகள் பார்ப்பவளைக் கோவிலில் அதிசயமாகப் பார்க்க வந்தாராமே!' என்று வியந்தாள் தங்கம்.

இருந்தபோதிலும் பொறுமையை இழக்காமல், “வீட்டிலே பேசிக்கொண்டால் போயிற்று. அதற்காக என்னை இங்கே தேடி வர வேண்டுமா என்ன? இது கிராமாந்திரம் அத்தான்! உங்கள்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.