(Reading time: 18 - 35 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக இருந்து விடுவாரோ? நானே அவரை அணுகி விஷயத்தைக் கூறிய பிறகு நிச்சயம் அவர் முகம் மகிழ்ச்சியால் மலரும். ரொம்ப தாங்ஸ்' என்று குறைந்தது நாலைந்து முறையாவது கூறாமல் இருக்க மாட்டார்.

அவள் விமானக் கூடத்தை அடைந்த சமயம் மணி பத்தேகால் தான். விமானம் புறப்படுவதற்கு இன்னும் பதினைந்து நிமிஷ நேரம் இருந்தது.

பார்வதி உள்ளே போய் அவரைத் தேடிய போது, அவர் லெளஞ்சின் ஒரு மூலையிலிருந்த சோபாவில் அமர்ந்து தமது காரியதரிசியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

பார்வதி அவர் எதிரில் போய் நின்றபோது அவர் வியப்பை வெளிக் காட்டாமல் லேசாகப் புன்முறுவல் பூத்த படி "வாருங்கள்! நீங்களும் எங்காவது வெளியூர்...'' என்று விசாரித்தார்.

"தங்களைப் பார்க்கத்தான்...." என்று கூறினாள் பார்வதி.

'அப்படி என்ன முக்கிய விஷயம்? இத்தனை நேரம் கல்லூரியில் தானே இருந்தேன்? அங்கேயே பேசியிருக்கலாமே?' என்று மனத்திற்குள் யோசித்து எண்ணிக்கொண்டாலும், ''என்னைப் பார்க்கவா? அப்படி என்ன முக்கிய விஷயம்?'' என்றவர், ''அடேடே, நிற்கிறீர்களே! இப்படி உட்காருங்கள்" என்று சோபாவைத் தன் கையினால் தட்டிப் பார்வதியை அமரச் சொன்னார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்ட பார்வதி, தன் பையிலிருந்த அவர் மூக்குக் கண்ணாடியை எடுத்து, "இதோ இதை மறந்து வந்து விட்டீர்கள்! இது ரொம்ப அவசியமல்லலா? வெளியூருக்குப் போகுமிடத்தில் இது இல்லையென்றால் முக்கிய காரியமே தடைப்பட்டுப் போகும். வேறு எதை மறந்தாலும் பரவா வில்லை. வேறொன்று வாங்கிக் கொள்ளலாம். மூக்குக் கண்ணாடியை நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாதே! அதற்காகத்தான் நானே எடுத்துக்கொண்டு அவசரமாக வந்து சேர்ந்தேன்!'' என்றாள்.

மூக்குக் கண்ணாடியை மறந்து வந்து விட்ட விஷயம் சேதுபதிக்கு அப்போது தான் புரிந்தது.

''அடாடா! மிக்க நன்றி! நாளைக்கு முக்கியமான டாகு மென்ட்டுகளையெல்லாம் படித்துக் கையெழுத்துப் போட வேண்டும். அந்த நேரத்தில் இது இல்லையென்றால் ரொம்பத் தடுமாற்றமாய்ப் போயிருக்கும். இதன் முக்கியத்தை உணர்ந்து தாங்கள் இவ்வளவு அக்கறையோடு இதைக் கொண்டு வந்து கொடுத்ததற்குத் தங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை '' என்றவர், ''....ம்.... விழா ரொம்பச் சிறப்பாக நடந்தது. ஏற்பாடு அதைக் காட்டிலும் சிறப்பாயிருந்தது'' என்றார்.

”தங்கள் பேச்சு விழாவுக்கே சிகரம் வைத்தது போல் அமைந்து விட்டது'' என்று பார்வதி பதில் கூறினாள்.

அவர்களிடைய சம்பாஷணை இரண்டு அல்லது மூன்று நிமிடமே நீடித்தது. இதற்குள் ”பம்பாய்

One comment

  • :clap: nalla rammiyamaana epi.manathukku amaithi koduppathu polirukku :clap: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.