(Reading time: 14 - 28 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

என்று கேட்டுக் கொண்டே வந்தாள் பாரதி.

''நாம் இருவரும் இங்கேயே இந்த ஹாலிலேயே உட் கார்ந்து கொள்ளலாம்'' என்றாள் பார்வதி.

கணக்குப் பாடம் ஆரம்பமாயிற்று. முதல் நாள் என்பதால் மிகவும் சுலபமான கணக்குகளையே கொடுத்துப் போடச் சொன்னாள் பார்வதி. அரைமணி நேரம் கழிந்தது.

சரி, இன்று இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்...” என்று கூறிய பார்வதி, அமைதியின்றி அங்குமிங்கும் பார்த் துக் கொண்டே இருந்தாள். அந்தரங்கமாக ஓர் ஆசை, அவர் ஒரு வேளை வந்தாலும் வரலாமென்று. அதே சமயம் வாசலில் கார் வரும் ஓசை கேட்டது. ஆமாம், அதிலிருந்து சேதுபதிதான் இறங்கி வந்தார்.

'அவரை எப்படியும் சந்திக்கலாம்' என்று பார்வதியின் உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது வீண் போகவில்லை. பார்வதி புறப்படுவதற்குத் தயாராக எழுந்து நின்று கொண்டிருப்பதைக்கண்ட சேதுபதி, ”உட்காருங்கள் போகலாம். வந்து வெகு நேரமாயிற்றா? பாரதி, எங்கள் இருவருக்கும் காப்பி கொண்டுவா...” என்று கூறியபடியே சோபாவில் சாய்ந்தவர் ”ம்... பாரதி கணக்கில் எப்படி இருக்கிறாள்!” என்று கேட்டார்.

பரவாயில்லை. நான் வந்து அரை மணி நேரம்தான் ஆயிற்று. முதல் நாளே எல்லாக் கணக்குகளையும் கொடுத்து அவளைத் தொந்தரவு படுத்த விரும்பவில்லை. எடுத்த எடுப்பி லேயே மூளையைக் குழப்பிவிடக் கூடாதல்லவா? பொதுவாகவே குழந்தைகள், தினம் மூன்று மணிநேரம் படித்தால் போதும் என்பதுதான் என் அபிப்பிராயம். ஆடு மாடுகள் புல்லை மேய்கின்றன. மேலோடு மேய்கின்றன. புல் திரும்பவும் செழிப்பாக வளர்கிறது. வேர் வரையில் தின்று விட் டால் என்னவாகும்? புல்லே அழிந்துவிடும் அல்லவா? அதே மாதிரிதான் குழந்தைகளையும் வருத்தக் கூடாது'' என்றாள்.

"பேஷ்! என்னுடைய கருத்தும் இதேதான். ஏறக்குறைய நம் இருவருடைய எண்ணங்களும் ஒன்றாகவே இருக் கும் போலிருக்கிறது'' என்று சிரித்துக்கொண்டே கூறினார் சேதுபதி.

"நம்முடைய சிறு வயதில் கொண்டிருந்த அபிப்பிராயங்களுக்கும் இப்போதுள்ள-வற்றுக்கும் எவ்வளவோ வித்தியாசம். முன்பெல்லாம் மாணவிகள் ஓயாமல் படித்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்துடையவளா யிருந்தேன். இப்போது முற்றிலும் மாறாக எண்ணுகிறேன். வயது ஆக ஆக, அனுபவம் முதிர்ச்சி அடைய அடைய, நம்முடைய கருத்துகளும் மாறிக்கொண்டே போகின்றன....” என்றாள் பார்வதி.

''அதுதான் இயற்கை, அறிவின் வளர்ச்சிக்கு அடையாளம், மாவடுவாக இருக்கும்போது துவர்க்கிறது. அதுவே காயாகும்போது புளிக்கிறது. பின்னர் பழமாகும்போது இனிக்கிறது. ஆகவே, இவை மூன்றும் வெவ்வேறு பழ வகை கள் என்று கூறுவது சரியில்லை யல்லவா?''

சேதுபதி இந்த உவமையைக் கூறியதும் பார்வதி, "மிகப் பொருத்தமான உதாரணத்தின் மூலம்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.