(Reading time: 13 - 26 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

விட்டான்.

பார்வதி உள்ளே போய் மறைவாக நின்று கொண்டு அந்த வாலிபனுடைய அழகிய வடிவத்தை, கம்பீரத்தைப் பார்த்து ரசித்தாள். அவன் தனக்குப் புருஷனாக வாய்ப்பானா?' என்று ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

பிள்ளைக்கு மாமா, பார்வதி கொண்டுவந்து வைத்த கோதுமை அல்வாவை ருசித்தபடியே தம் மனைவியைப் பார்த்து, "நீயும் அல்வா செய்கிறாயே! இந்த அல்வாவைப் பார்! எவ்வளவு ருசியாயிருக்கிறது!'' என்றார்.

"ஏன், உங்கள் மனைவி செய்யும் அல்லவா இவ்வளவு நன்றாக இருக்காதோ?'' என்று கேட்டார் சாம்சிவம்.

"என் மனைவி செய்யும் அல்வாவைச் சாப்பிட்டால் அப்புறம் அபிப்பிராயமே கூறமுடியாது'' என்றார் பிள்ளைக்கு மாமா கண் சிமிட்டியபடி!

@அதென்ன அப்படி?'' என்று வியந்தார் சாம்பசிவம்.

"அது அப்படித்தான். அந்த அல்வாவைச் சாப்பிட்ட தும் நாக்கும் அண்ணமும் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொண்டு பேச முடியாமல் போய்விடும்” என்றார் பிள்ளைக்கு மாமா,பார்வதி உட்பட எல்லோரும் சிரித்து விட்டார்கள்!

"சரி, நேரமாகிறது; நாங்கள் போய் இரண்டு நாட் களில் தகவல் சொல்லி அனுப்புகிறோம்...'' என்று கூறிப் புறப்பட்டனர் அந்தப் பெரியவர்கள்.

அதுவரை தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை, அவர்கள் புறப்படும்போது 'வீல்' என்று அழத் தொடங்கியது.

"இது யாருடைய குழந்தை? '' வியப்புடன் கேட்டார் பிள்ளைக்கு மாமா.

@இந்தப் பெண்ணுக்கு ஓர் அண்ணன் இருக்கிறான். அவனுடைய குழந்தை. அது ஒரு தனிக்கதை'' என்றார் சாம்சிவம்.

நாலைந்து நாட்கள் கழிந்தன. ஏனோ தெரியவில்லை. இந்தச் சம்பந்தத்தில் எங்களுக்கு இஷ்டமில்லை என்று தகவல் அனுப்பி விட்டார்கள் அந்தப் பெரியவர்கள்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பார்வதியிடம் கலியாணம் என்ற பேச்சை எடுக்கவே பயந்து விட்டார் சாம்பசிவம். பார்வதியும் தன் திருமணத்தைப்பற்றி அன்றோடு மறந்து விட்டாள். காலம் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் சாம்பசிவமும் கண் மூடிவிட்டார். இதெல்லாம் நிகழ்ந்து இன்று முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.

பார்வதி தன் கையிலிருந்த சரஸ்வதி - சேதுபதியின் திருமணக் கடிதத்தை இன்னொரு முறை படித்துப் பார்த்து விட்டு, அன்று தன்னைக் காணவந்த வாலிபன் தான் சேதுபதியா? சரஸ்வதிதான் அவருடைய மனைவியா? சேதுபதியின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள திருவுருவப்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.