(Reading time: 12 - 23 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

பொம்மைநாய் தானாகவே வாலை ஆட்டிக் கொண்டு ஓடி வருகிறதாம்.''

"தானாகவே எப்படி ஓடி வரும்? யாராவது கீ கொடுத்து வைத்திருப்பார்கள்.”

அதுதான் இல்லை; கூப்பிடறவர்களின் சத்தத்தைக் கேட்டுத் தானாகவே ஓடி வருகிறதாம்.”

விஞ்ஞானம் அவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது. அந்த நாய் என்ன விலையாம்?''

அறுநூறு ரூபாயாம்!''

ரொம்ப அதிகம்....”

'கூப்பிட்டால் ஓடி வருகிறதே! அதுக்கு இது ஒரு விலையா?”

தெருவிலே போகிற நாய்க்கு ஒரு பக்கோடாவைக் காட்டிக் கூப்பிட்டால் போதுமே! உன் கூடவே ஓடி வருமே! இதுக்குப் போய் அறுநூறு ரூபாய் செலவழிப்பார்களா?'' என்று சிரித்தார் சேதுபதி.

பாரதியும் சிரித்து விட்டாள்.

''நான் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அறுநூறு ரூபாய் ரெடியா இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே ஓடினாள் பாரதி.

"பாரதி!'' என்று அழைத்தார் சேதுபதி. வேகத்துடன் புறப்பட்ட பாரதி, சேதுபதியைத் திரும்பிப் பார்த்து "என்னப்பா? என்று கேட்டாள்.

''ஆமாம், உங்க பிரின்ஸிபாலைக் கூப்பிடலையா?"

''அழைச்சிருக்கேன், அநேகமா, இப்ப வந்தாலும் வருவாங்க.''

பிரின்ஸிபால் வரப் போகிறாள் என்னும் சேதி சேதுபதிக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. ஆயினும், அவர் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை.

நேற்று கூடப் பார்வதியைச் சந்தித்தபோது பொது வாகப் பல விஷயங்களைப்பற்றி அவர் வெகுநேரம் விவாதித்துக் கொண்டிருந்தார். எல்லா விஷயங்களிலும் அவளுக்குத் தெளிவான, நிச்சயமான அபிப்பிராயம் இருந்தது. ஆழ்ந்த படிப்பும், படிப்புக்கேற்ற பண்பும், எதையும் சூட்சுமமாகப் புரிந்து கொள்ளும் அறிவுக் கூர்மையும் வாய்ந்த பார்வதி யுடன் பேசிக் கொண்டிருப்பதில் சேதுபதிக்கு ஒரு வெறியே இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு முறை சந்திப்பதாலும் பேசுவ தாலும் தீர்ந்து போகிற வெறி அல்ல அது. தாகத்துக்கு உப்புத் தண்ணீர் குடிக்கிற மாதிரிதான். குடிக்கக் குடிக்க, மேலும் மேலும் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கு மல்லவா? தன்னுள் புகுந்து தன்னை ஆட்டி வைக்கும் அந்த மயக்கத்தைப்பற்றி அவரே ஆராய்ந்து பார்த்தார். அதன் இரகசியம், மர்மம், மாயம் எதுவுமே அவருக்கு விளங்கவில்லை.

தம் வாழ்நாளில் அவர் எத்தனையோ அழகிகளைச் சந்தித் திருக்கிறார். அறிவாளி-களுடன் பழகியிருக்கிறார். அவர்களிடமெல்லாம் காணாத கவர்ச்சியும் மயக்கமும் பார்வதியினிடத்தில்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.