(Reading time: 10 - 20 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 10 - சாவி

கலின் ஒளி மங்கி, அந்தியின் இருள் மயங்கும் சந்தி நேரத்தில் வானத்தில் கண் சிமிட்டும் வைர மலர்களைக் கடற் கரையில் உட்கார்ந்தபடியே கண்டு களித்துக் கொண்டிருந் தான் ராஜா. அவனருகில் அமர்ந்திருந்த பாரதி, கடல் அலை களையும். அவற்றுக்குப் பின்னால் உயர்ந்தும் தாழ்ந்தும் மிதந்து கொண்டிருந்த நிழல் சித்திரம் போன்ற படகுகளை யும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஜன சந்தடி அதிகமில்லாத இடமாகப் பார்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று, அவர்களுக்குப் பின்னணி யாக அமைந்திருந்தது.

''படகிலே ஒரு முறை பிரயாணம் செய்ய வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது'' என்றாள் பாரதி.

"எனக்கும் கூடத்தான்; ஆனால் அதற்கு 'விஸாவும் "பாஸ் போர்ட்டும் வாங்க வேண்டும்?'' என்றான் ராஜா.

"கப்பலில் வெளி நாட்டுக்குப் பயணம் செய்வதாயிருந்தால் தானே அதெல்லாம் வாங்க வேண்டும்". பாரதி கேட்டாள்.

"இல்லை, படகிலே போவதாயிருந்தாலும் வேண்டும். நீயும் நானும் வாழ்க்கைப் படகில் பயணம் செய்ய வேண்டுமானால், அதற்கு என் அத்தையிடமும், உன் தந்தையிடமும் 'பாஸ் போர்ட் வாங்கியாக வேண்டும்'' என்றான் ராஜா.

பாரதி சிரித்துவிட்டாள்.

சினிமாவிலே காதலர்கள் "டூயட் பாடிக்கொண்டு படகில் போவார்களே, அது எனக்குக் கட்டோடு பிடிக் காது'' என்றான் ராஜா.

"ஏன்?" என்று கேட்டாள் பாரதி.

"அந்தக் காதலர்கள் நாமாக இல்லையே என்றுதான்!" என்றான் ராஜா.

கரையை நோக்கி வந்து கொண்டிருந்த படகுகளைப் பார்த்தபடியே, "முதன் முதல் இந்தப் படகைக் கண்டு பிடித்தது யார்?' என்று கேட்டாள் பாரதி.

''நான் தான்'' என்றான் ராஜா.

"நீங்களா?" என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் பாரதி.

''ஆமாம், இப்போது நாம் சாய்ந்து கொண்டிருக்கிறோமே இந்தப் படகையும், இந்த இடத்தையும் கண்டு பிடித்தது நான் தானே!'' என்றான் ராஜா.

"ரேடியோ குவிஸ் புரோகிராமில் 'படகைக் கண்டு பிடித்தது யார்?' என்று கேட்டால், இந்த மாதிரிப் பதில் சொல்லி வைக்காதீர்கள்! உங்கள் என்ஜினீரிங் காலேஜுக்கே அவமானம்!'' என்றாள் பாரதி,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.