(Reading time: 15 - 29 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

அடக்கிக் கொண்டவளாய் மெளனமாகச் சமையலறையை நோக்கி நடந்தாள் பாரதி.

சேதுபதிக்கும் பாரதிக்கும் மேஜை மீது உணவு தயாராகக் காத்திருந்தது. தந்தையும் மகளும் அருகருகே அமர்ந்ததும், சேதுபதியின் சகோதரி உணவு வகைகளை ஒவ்வொன் றாக எடுத்துப் பரிமாறினாள். சேதுபதி எதுவும் பேசாமல் மெளனமாகவே சாப்பிடத் தொடங்கினார். அவர் முகத்தில் மகிழ்ச்சியில்லை. பேசிய இரண்டொரு வார்த்தைகளிலும் உற்சாகமில்லை.

'ஒருவன் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தபோதிலும் கவலைகள் பட்டபோதிலும் சாப்பிடும் நேரங்களில் மட்டும் எல்லாவற்றையும் மறந்து நிம்மதியுடன் சாப்பிட வேண்டும்' என்று சேதுபதி அடிக்கடி கூறுவது வழக்கம். தம்முடைய அனுபவத்திலும் அவர் இந்தக் கொள்கையைக் கடை பிடிக்கத் தவறியதில்லை. வியாபாரத்தில் பல லட்சம் ரூபாய் நஷ்டமாகியிருந்தாலும் லாபமாகியிருந்தாலும் இரண்டையும் சமநிலையில் ஜீரணம் செய்துகொள்ளும் சக்தி அவருக்கு உண்டு. அவர் முக-பாவத்திலிருந்து, லாபம் நஷ்டம் எதையும் கண்டுபிடித்துவிட முடியாது. அத்தகைய திடசித்தம் வாய்ந்தவர் முகத்தில் இன்று மட்டும் ஏன் இத்தனைக் கவலை? அமைதியின்மை ?

"அப்பாவின் கவலைக்கு என்ன காரணம்?'' என்று யோசித்தாள் பாரதி. தன் அண்ணனின் முகத்தில் என்றுமில்லாத வருத்தம் சூழ்ந்திருப்பதன் காரணம் என்னவென்று புரியாமல் தவித்தாள் சேதுபதியின் தங்கை.

சேதுபதியின் கை விரல்கள் சாப்பாட்டை அடைந்து கொண்டிருந்தன. அவர் உள்ளம் எங்கேயோ அலைந்து கொண்டிருந்தது.

மெளனமாக. இதைக் கவனித்துக் கொண்டிருந்த பாரதியும் அத்தையும் ஒருவருக்-கொருவர் ஜாடைகளாலேயே பேசிக் கொண்டனர்.

'அப்பாவின் வருத்தத்துக்கு என்ன காரணம்? ஏன் சோற்றை அளைந்து கொண்டிருக்கிறார்?' என்று பாரதி கேட் டாள். இல்லை, அவள் முகபாவமும் கைஜாடைகளும் அப்படிக் கேட்டன்.

"எனக்கென்ன தெரியும். உன் அப்பா சங்கதி? ஒரு வேளை பஞ்சுமில் தீப்பற்றி எரிந்து விட்டதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?" சேதுபதியின் சகோதரி பதில் கூறினாள். இல்லை அவளுடைய கண்களும் அபிநயங்களும் அவ்வாறு பதில் கூறின.

மகளும் சகோதரியும் மெளன மொழியில், அபிநயங் களின் மூலமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்த சேதுபதி லேசாகச் சிரித்துக் கொண்டே, "என்ன பாரதி ! அத்தையும் மருமகளும் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நான் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறேன் என்றுதானே? பஞ்சு மில் எரிந்து போயிற்றே என்று நான் வருத்தப்படுவதாக எண்ணுகிறீர்களா? வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் போது கவலைப்படுவது என்பது எனக்குத்

One comment

  • :clap: nice epi.moothorgal solli irukkiraargale katrathu kaimmannalavu,kallathathu ulagalavu endru.athai pinpatri nadappom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.