(Reading time: 12 - 24 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 12 - சாவி

க்கத்து வீட்டுப் பசு மாட்டின் கனிந்த குரல், காலை பத்திரிகை வந்து விழும் சலசலப்பு, பால் டிப்போ சைக்கிள் மணியோசை இவையாவும் பார்வதிக்கு விடியற்காலை வேளையில் வழக்கமாகக் கேட்டுப் பழக்கமாகிவிட்ட ஒலிகள்.

'இன்று இன்னும் அந்த ஒலிகளைக் கேட்க முடிய வில்லையே, ஏன்?' என்று யோசித்தவளாய்க் கைக்கடிகாரத் தைப் பார்த்துக் கொண்டாள். அதில் மணி ஐந்தரைதான் ஆகியிருந்தது.

'ஒரு வேளை இந்தக் கடிகாரம் மெதுவாக ஓடுகிறதோ?’ என்று எண்ணியவளாய், ”ராஜா! ராஜா!'' என்று அழைத் தாள்.

அவன் உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தான். கீழே இறங்கிச் சென்று ஹாலில் மாட்டப்பட்டிருந்த அந்த பிரெஞ்சு நாட்டுக் கடிகாரத்தைப் பார்த்தபோது, அதுவும் ஐந்தரை மணியையே காட்டியது. அந்தக் கடிகாரத்தின் மீது அவளுக்கு அதிக நம்பிக்கை!

''மணி ஐந்தரைதான் ஆகிறதா?... அப்படியானால், நான் இன்று வழக்கத்தைக் காட்டிலும் சீக்கிரமே எழுந்து விட்டிருக்கிறேன்...” என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள்.

உண்மையில், பார்வதி அன்று உறக்கத்தைவிட்டு எழுந் திருக்கவே இல்லை. இரவெல்லாம் தூங்கியும் தூங்காமலும் படுக்கையில் புரண்டவாறு சேதுபதியைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்தவளுக்கு, 'எப்போது தூங்கினோம், எப்போது விழித்துக் கொண்டோம்?' என்ற உணர்வே துளியும் இல்லை.

படுக்கையினின்றும் வெகு சீக்கிரமே எழுந்துவிட்டவள், உள்ளத்தில் அமைதியோ உற்சாகமோ இன்றி இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தாள். புத்தகங்களை எடுத்துப் புரட்டினாள். பலகணியின் வழியாகக் கீழ்த்திசையில் நிகழ்ந்து கொண்டிருந்த விடியற்காலை ஜாலங்களைப் பார்க்கலானாள். எதிலும் மனம் லயிக்காமற் போகவே, கீழே இறங்கிச் சென்று குளிர்ந்த நீரில் உடல் குளிரக் குளித்துப் பின்னர், உடை மாற்றிக் கொண்டு கண்ணாடியின் முன் சென்று தன் உருவத்தையே சற்றுநேரம் பார்த்துக்கொண்டாள். கூந்தலை அழகாகச் சீவி, கொண்டை போட்டு, ஊசிகளால் அவற்றைக் கட்டுப்படுத்திய பின்னர், நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு ஒருமுறை தலையைச் சாய்த்துப் பார்த்தவளாய், ''அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை நாற்பதுக்கும் ஒன்றிரண்டு வயது குறைவாகவேதான் மதிப்பிடலாம் என்று சமாதானம் சொல்வது போல் எண்ணிக் கொண் டாள்.

மேஜை மீது கிடந்த மூக்குக் கண்ணாடியை எடுத்துச் சீலையின் தலைப்பால் அதைத் துடைத்து அணிந்துகொண்ட பிறகு மீண்டும் ஒரு முறை, நிலைக்கண்ணாடியின் முன் போய் நின்று தன் உருவத்தைப் பார்த்தாள். இப்போது இரண்டு வயது அதிகமாகி விட்டது போல் தோன்றியது.

"பரவாயில்லை; வயது சற்று அதிகமாகத் தோன்றினாலும், இந்தக் கண்ணாடி அணிந்த பிறகே

2 comments

  • Nice episode :hatsoff: .koncham 2 perum manasu vidu pesidaanka enda ellam Seri aahidum . Waiting for next episode :-) .
  • facepalm irandu perum ore maathiri ennugiraarrgale? :Q: but eppothu than manathil ullathai solla pogiraargalo theriyavillai.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.