(Reading time: 13 - 26 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

வரவேண்டும்...'' என்று அகமும் முகமும் மலரக் கைகூப்பி வரவேற்றார்.

முதிர்ந்த தோற்றமும் அறிவின் ஒளிவீசும் கண்களும் அடக்கமும் அமைதியும் கலந்த பண்பாடும் ஒருங்கே சேர்ந்த உருவமே வேதாந்தம் என்ற பெயரைப் பெற்றிருந்தனவோ?

'தங்கள் வரவு நல்வரவாகுக' என்ற உபசரிப்புடன் தம்முடைய அறைக்குப் பார்வதியை அழைத்துச் சென்றார் அவர்.

புன்சிரிப்பைத் தவிர, பார்வதியின் வாயினின்று எதுவுமே வெளிப்படவில்லை.

பேச்சை எப்படித் தொடங்குவது என்பதிலேயே அவள் மனம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.

கடைசியில், ”தங்களைச் சந்தித்துப் பேசும் பேறு எனக்குக் கிட்டியதற்காக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று பேச்சைத் தொடங்கினாள்.

வேதாந்தம் சிரித்தார். கள்ளம், கபடறமற்ற அந்தச் சிரிப்பின் மூலமே தம்முடைய பதிலைக் கூறிவிட்டார் அவர்.

தாங்கள் என்னைத் தேடி வந்த காரியம் என்னவோ?”

ஆங்கிலத்தில் மிக மிகச் சரளமாகப் பேசும் திறமை பெற்றிருந்த போதிலும் வேதாந்தம் தூய தமிழிலேயே பேசினார்.

கார்நேஷன் கல்லூரி பிரின்ஸிபால் பதவி அவரைத் தேடி வந்ததற்குக் காரணம் அவர் தமிழில் பெரும் புலமை பெற்றவர் என்பதற்காக அல்ல. ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள ஞானமே அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது. ஆயினும், அவர் தம்மை ஒரு தமிழ்ப் புலவர் என்று கூறிக் கொள்வதிலேயே பெருமைப்பட்டார். தம்மைப் பொறுத்த வரையில் தமிழுக்கு உயர்ந்ததொரு ஸ்தானத்தைக் கொடுக்க வேண்டுமென்ப-தற்காகவே தலைப்பாகையைத் தலையிலே அணிந்து கொண்டிருந்தார்.

வள்ளுவரைப்பற்றித் தங்கள் கருத்து என்னவென் பதை நான் அறியலாமா?” பார்வதி மிக மிக விநயமாகக் கேட்டாள்.

''’வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு,’ என்று பாரதி பாடிய பிறகு, நான் கூறுவதற்கு என்ன இருக்கிறது!''

"மன்னிக்க வேண்டும். இன்னொரு விஷயம் பற்றியும் தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்" என்றாள் பார்வதி.

''நன்று நன்று! தாராளமாகக் கேளுங்கள்'' என்றார் வேதாந்தம்.

காதல் என்ற சொல்லுக்குத் தாங்கள் விளக்கம் தர முடியுமா ''

''காதல் என்ற புனிதமான சொல் ஆண் பெண் உறவு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நான் தமிழ் மொழி மீது காதல் கொண்டுள்ளேன். சிலர் இந்தி மீது காதல் கொண்டுள்ளார்கள். உங்களுக்கு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.