(Reading time: 14 - 27 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

'அதிக வேலை இருப்பதால் இனி மாலை வேளைகளில் வரமுடியாதென்று கூறினீர்களே, இப்போது வேலையெல்லாம் தீர்ந்துவிட்டதா?’ என்று கேட்பார் என்று எதிர்பார்த்த பார்வதிக்குச் சேதுபதியின் வினா வியப்பூட்டியது.

எவ்வளவு பெருந்தன்மையான போக்கு! எவ்வளவு உயர்ந்த புண்பு!’ - பார்வதி எண்ணிக் கொண்டாள்.

''பாரதி நன்றாகவே படித்து வருகிறாள். ஞாபக மறதி தான் கொஞ்சம் அதிகமாயிருக்கிறது. எந்தப் புத்தகம் கேட்டாலும் அந்தப் புத்தகத்தை மறந்து வந்துவிட்டதாகச் சொல்கிறாள். ஆகவேதான் புத்தகங்கள் இருக்கும் இடத்திலேயே பாடத்தை நடத்துவதென்று வந்துவிட்டேன்...''

"எனக்கும் கூட இனி அவ்வளவு வேலை இருக்காது. என் அலுவல்களை யெல்லாம் கவனித்துக் கொள்ளப் பொறுப்பான ஒருவரை நியமித்துவிட்டேன். மாலை வேலைகளில் இனி எனக்கும் ஓய்வுதான்... தினமும் ஒரு மணி நேரமாவது நிம்மதியாகப் பொழுதைக் கழிக்கப் போகிறேன். பொருளாலும் புகழாலும் மட்டும் ஒருவன் அமைதியைக் கண்டு விடமுடியாது. 'கம்பானியன்' என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்களே, அது ரொம்ப ரொம்ப முக்கியம்...''

பாரதி இருவருக்கும் காபி கொண்டுவந்து வைத்தாள்.

சிற்சில சமயங்களில் நமக்குத் தனிமை வேண்டியிருக்கிறது. சிற்சில சமயங்களில் தனிமை அலுத்துப் போய், யாராவது வரமாட்டார்களா? என்று தோன்றி விடுகிறது.”

பார்வதி பதில் ஏதும் கூறாமல் சேதுபதியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சரி... நீங்கள் டியூஷனை ஆரம்பியுங்கள்... எனக்கும் கொஞ்சம் அவசர ஜோலியிருக்கிறது. அரை மணியில் திரும்பி வந்துவிடுகிறேன்'' என்று கூறிப் புறப்பட்டார் சேதுபதி.

அன்றிரவு பார்வதி வெகு நேரம் தூங்காமல், தூக்கமும் வராமல், அமைதியின்றிப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். சேதுதிபதி கூறிய வார்த்தைகளை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்திப் பார்த்து ’எதற்காக இப்படிப் பேசினார். அதன் இரகசியம் என்ன?’ "கம்பானியன்” என்ற சொல்லுக்கு என்ன பொருள்? இவைபற்றியே அவன் எண்ணம் சுழன்று கொண்டிருந்தது. என்னுடைய துணையை மனத்தில் எண்ணியே அப்படிப் பேசியிருக்கிறார். அவருடைய உள்ளத் தில் எனக்கு இடமிருக்கிறது. அவர் என்னை விரும்புகிறார். என் உறவை நாடுகிறார். அவருக்கு என்மீது நாட்டமிருக் கிறது. இல்லையென்றால் இம்மாதிரி அவர் பேசியிருக்க மாட்டார். சொற்களைத் தராசில் நிறுத்திப் போட்டு மிதமாகப் பேசக் கூடியவராயிற்றே! என் உள்ளமும் அவரையே எண்ணி எண்ணி ஏங்குகிறது. அவரை நான்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.