(Reading time: 14 - 27 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

பதினைந்து வருஷமாக இதைத் தானே திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் இது தானே பாடப்புத்தகம்! இதன் ஆசிரியர் சார்லஸ் டிக்கன்ஸன் ஒரு பெரிய அறிவாளி'' என்றாள்.

'ஆமாம். மகா மேதை!'' என்று கேலியாகக் கூறினான் ராஜா.

''என்னடா உளறுகிறாய்?''

''நான் உளறவில்லை. டிக்கன்ஸ்தான் உளறியிருக்கிறான். பெரிய அறிவாளியாம்! மேதையாம் உலகப்புகழ் பெற்ற ஆசிரியராம்! 'இந்தப் புத்தகத்தில் அவன் எழுதி யிருப்பதைப் பார்த்தீர்களா ; கற்பனை யென்ற பெயரில் கண்டதை யெல்லால் எழுதலாம் போலிருக்கிறது. ஐம்பது வயசுக் கிழவன் ஒருவனைக் காதலிக்கிறாளாம். ரொம்ப நன்றாயிருக்கிறதல்லவா? இதை பெரிய நகைச்சுவை என்று எழுதியிருக்-கிறாராம். இல்லை,இயற்கை என்று எழுதியிருக் கிறாரா? வாழ்க்கையில் நடக்கக் கூடியதா இது? இதற்குக் காதல் என்ற புனிதமான சொல் ஒரு கேடா? சே! புத்தகமா இது எழுத்தா இது? கிழவிக்கும் கிழவனுக்கும் காதலாம்! வெட்கக் கேடு தூ...'' என்று அந்தப் புத்தகத்தைக் கோபமாக அப்பால் வீசி எறிந்தான் ராஜா.

ராஜாவின் வார்த்தைகள் பார்வதியின் உள்ளத்தில் ஈட்டிகளாகப் பாய்ந்தன. 'தன்னையே குற்றம் சாட்டிப் பேசுகிறானோ?' என்று கூட அவள் நெஞ்சம் குறுகுறுத்தது. அவளால் அவனுக்குப் பதில் கூற முடியவில்லை. தானே அந்தக் குற்றவாளியாக மாறி அவன் எதிரில் நிற்பது போன்ற ஒரு மயக்கம்!

மெளனமாகத் திரும்பிய பார்வதி மெதுவாக அவ் விடத்தைவிட்டு நகர்ந்தாள். அவள் கால்கள் வாசல் பக்கம் செல்லவில்லை. அதற்குப் பதிலாக மாடிப்படிகளை நோக்கி நடந்தான்.

------------

தொடரும்

Go to Visiri vazhai story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.