(Reading time: 12 - 24 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

டாக்டர் புன்சிரிப்புடன் திரும்பி, "சாப்பிடலாம் என்று நான் கூறியது உன்னைத்தான். உன் அத்தையை அல்ல" என்றாள்.

"பார்த்தாயா ராஜா! போய்ச் சாப்பிடு'' என்றாள் அத்தை.

அன்றிரவெல்லாம் பார்வதிக்குத் தூக்கமே இல்லை. பழைய சம்பவங்களெல்லாம் துண்டு துண்டாகப் பார்வதி யின் நினைவில் தோன்றின. பலவீனம் காரணமாகக் கண்ணெதிரில் மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.

என்னுடைய கணவரின் அன்புக்குப் பத்திரமாகப் பார்க்கிறாயா; அம்மா'' - சரஸ்வதியின் குரல்.

காகிதக் குப்பைகளுக்கிடையே பளிச்சிடும் திருமண அழைப்பிதழ், விமானக் கூடத்தில் அவருடைய மூக்குக் கண்ணாடியைக் கொண்டு கொடுத்தபோது அவர் பார்த்த பார்வை - கூறிய வார்த்தை...

[பெண்கள் ஓளவையைப் போல் கல்வி அறிவு பெற வேண்டும். ஆனால் ஓளவையைப் போல் திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று கூறிவிடக் கூடாது' என்று தான் கூறியபோது அவர் சிரித்த சிரிப்பு.... ஒருமுறை வியர்த்துக் கொட்டியது. விடியும் நேரத்தில் அயர்ந்து தூங்கிக்கொண் டிருந்தாள் பார்வதி. ராஜா வந்து அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். ஜுரம் இப்போது துளிக்கூட இல்லை என்று தெரிந்ததும், அவன் அவளை எழுப்பாமலே போய் விட்டான். பார்வதி கண்விழித்துப் பார்த்தபோது தன் அறைக்குள் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

கடிகாரத்தில் மணி பத்து அடித்துக் கொண்டிருந்தது.

''ஓ! மணி பத்தாகி விட்டதா " படுக்கையை விட்டு எழுந்த பார்வதி, அவசர அவசரமாகக் கீழே இறங்கி வந்துவிட்டாள். ஞானம் பதறிப்போய், ”நீங்கள் இன்று காலேஜுக்குப் போகக்கூடாது. டாக்டர் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்” என்றாள்.

''கல்லூரிக்குப் போனால் எனக்கு எல்லாம் சரியாகி விடும். ஜூரம் நேற்றோடு போய்விட்டது. மணி பத்தடித்து விட்டது. நான் போய் வருகிறேன்'' என்று ஞானத்திடம் சொல்லிக் கொண்டவள், சாப்பிடாமலேயே புறப்பட்டு விட்டாள்.

அன்று பார்வதியின் கார் கேட்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வில்லை. அவன் வழக்கமாக எழுந்து நின்று கும்பிடு போடும் நேரத்தில் போட்டுவிட்டான். இன்றைக்குப் பார்வதி லேட்!

பார்வதியின் கார் கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கிய போது, அங்கே மிஸஸ் அகாதாவைக் காணவில்லை. அகாதா அன்று கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கிய போது, 'குட் மார்னிங் பிரின்ஸிபால்' என்று கூறிக்கொண்டே பார்வதியின் கார் வருகிறதா என்று திரும்பிப்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.