(Reading time: 18 - 36 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

அதற்கு அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? இன்னொரு கல்யாணமா? சரஸ்வதியின் ஸ்தானத்தில் வேறொருத்திக்கு இடமா என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டே எழுந்து போய்விட்டான்....ம்.... இதெல்லாம் பழைய கதை... ஹார். விக்ஸ் ஆறிப் போகிறது. சாப்பிடுங்கள்'' என்றாள் காமாட்சி.

ஹார்லிக்ஸை அருத்தியபடியே பார்வதி யோசித்தாள்.

அவ்வளவு வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் சேதுபதியைப்பற்றியா நான் தவறாக எண்ணிக் கொண் டிருக்கிறேன்? என் அந்தரங்கத்தில் நான் அவர்மீது கொண்டுள்ள அன்பே என் கண்களை மறைத்து அவரும் என்னை நேசிப்பதாக எண்ணத் தூண்டுகிறதோ? எல்லோரையும் போல் அவரும் என்னிடம் சாதாரணமாகவே பழகி யிருக்கலாம். நானாகவே அவருடைய செய்கைக்கும் பேச்சுசுக்கும் தவறான நோக்கங்களைக் கற்பித்துக் கொண்டு வீண். பிரமை கொள்கிறேனா? அவர் சாதாரணமாகத்தான் பழகுகிறார் என்று எண்ணியபோது அவளுக்குப் பெரும் ஆறுதலா யிருந்தது. அடுத்தகணமே, அவர் தன் மீது அன்பு செலுத்த வில்லை என்கிற எண்ணம் அவளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தியது. காரணம் அவள் உள்ளம் இயற்கையாகவே அவர் அன்புக்கு ஏங்கியிருக்கிறது. இப்போது அவர் அன்பு செலுத்தவில்லை என்று தெரிந்ததும் அவள் போலியாகச் சந்தோஷப்பட்ட போதிலும் இயற்கையில் அவள் மனம் சொல்லொணாத வேதனையையே அனுபவித்தது.

ஹார்லிக்ஸுடன் அந்த வேதனையையும் சேர்த்து விழுங்கிய பார்வதி,

"...ம்.... அப்புறம்?'' என்று கேட்டாள்.

"அப்புறம் என்ன, அதற்குப் பிறகு நான் அவன் திருமணத்தைப் பற்றியே பேச்செடுப்பதில்லை. இப்போது கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு நாள் என்னிடம் அவனாகவே பேச்செடுத்தான். 'நான் மறுமணம் செய்து கொண்டால் உலகம் என்ன நினைக்கும் காமாட்சி!' என்று கேட்டான்.

"நீங்க என்ன பதில் சொன்னீங்க?''

”என்ன சொல்வேன்? உலகம் சிரிக்கும். இத்தனை வயசு கழித்துக் கல்யாணமாம்!'' என்றேன்

”அதற்கு அவர் என்ன சொன்னார்”'

"அசடே சுத்தப் பயித்தியமாயிருக்கிறாயே! நான் விளையாட்டாகக் கேட்டதை நிஜமாகவே நம்பிவிட்டாயா?” என்று கூறி மழுப்பிவிட்டுப் போய்விட்டான்.

”அப்புறம்...''

"அப்புறம் என்னிடம் கலியாணப் பேச்சே எடுப்பதில்லை. எப்போதாவது பேசினாலும் பொதுவாகப் பேசி விட்டுப் போய் விடுவான். யாரைப்பற்றியும் அதிகம் பேசமாட்டான். ஆனால் உங்க கல்லூரியைப் பற்றியும் உங்களைப்பற்றியும் பேச ஆரம்பித்து விட்டால் மணிக்கணக்கில் பேசிக்கொண் டிருப்பான்...'

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.