(Reading time: 12 - 23 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

போகிறேன். பாரதிக்கு நகை நட்டுகளெல்லாம் ரொம்ப வேண்டாம். கலியாணத்தை ஆடம்பரமாகச் செய்ய வேண்டாம். முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பினால் போதும். மேளத்தைக் கொட்டித் தாலியைக் கட்டி ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டு விடலாம். அதுவே போதும். பந்தல் கூட ரொம்பப் பெரிதாக வேண்டாம்'' என்றாள் பார்வதி.

"எனக்கும் அதே ஐடியாதான். கலியாணங்களின்போது ஆடம்பர முறைகளில் பணத்தை விரயம் செய்வது எனக்கும் கட்டோடு பிடிக்காது.”

''பல விஷயங்களில் நாம் இருவரும் ஒரே மாதிரியான கருத்துகளையே கொண்டிருக்கிறோம்...'' என்று மறை பொருளாகக் கூறிக் கண் சிமிட்டினாள் பார்வதி.

"ஆமாம்; அந்தக் கருத்துகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டுச் சொல்லிக் கொள்ளச் சந்தர்ப்பம் தான் ஏற்படுவதில்லை...' என்று சூட்சுமமாகவே பதில் கொடுத் தார் சேதுபதி.

''அண்ணா ! ஜவுளிகளை இங்கேயே கொண்டு வர சொல்லு ; பார்வதியே பார்த்து முடிவு செய்யட்டும்...” என்றாள் காமாட்சி.

ஏழெட்டு ஜவுளிக் கடைகளை இங்கு அனுப்பி வைக்கிறேன், போதுமா?” என்று சிரித்துக் கொண்டே புறப்பட் டார் சேதுபதி.

கலியாண ஏற்பாடுகள் துரித காலத்தில் நடந்து கொண்டிருந்தன. ராஜாவும் பாரதியும் தாங்கள் மணமக்கள் என்பதைக்கூட மறந்து ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்!

இன்னும் மூன்றே தினங்கள் தான் இன்னும் இரண்டே நாட்கள் தான்” என்று ஒவ்வொரு நாளும் கவலையோடு சொல்லிக்கொண்டிருந்தாள் காமாட்சி.

பார்வதி கட்டிலில் படுத்த வண்ணமே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

ராஜாவும் பாரதியும் கூட்டாகவே ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்ட அவள், "பாரதி! நாளை மறுதினம் ராஜா உனக்குக் கணவனாகப் போகிறான். ஆகையால் நீ அவனிடம் கொஞ்சம் வெட்கப்படுவதுபோல் நடிக்க வேண்டும்'' என்று கேலி செய்தாள்.

''போங்க அத்தை! எனக்கு வெட்கமாயிருக்கிறது!” என்றான் ராஜா.

''இதோ பார்த்தீர்களா, வேஷ்டி சட்டை” என்று கூறிக் கொண்டே கையில் ஜவுளிகளுடன் வந்து சேர்ந்தார் சேதுபதி.

வேட்டி சட்டையா? யாருக்கு? ராஜாவுக்கா?.... ரொம்ப சீப்பாக வாங்கி விட்டீர்களே! சிக்கனத்தை மாப்பிள்ளை டிரஸ்ஸிலேயே ஆரம்பித்து விட்டீர்களோ?'' என்று கேட்டாள் பார்வதி.

''இது மாப்பிள்ளை டிரஸ் இல்லை; வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே, செவிட்டுப் பெருமாள், அவனுக்கு” என்றார் சேதுபதி,

பார்வதி சிரித்து விட்டாள்.

"ஆமாம், திருமணம் நடக்கப்போகிற விஷயம் அவனுக்குத் தெரியுமா?....''

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.