(Reading time: 10 - 19 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

பொன் விழாவன்று அந்த ஹாலில் சேதுபதி பேசிய பேச்சு, தன்னுடைய சொற்பொழிவு, அவருக்குப் பக்கத்து வீட்டில் தான் அமர்ந்திருந்தது, மூக்குக் கண்ணாடியை அவர் மறந்து சென்றது, அதை விமான கூடத்தில் கொண்டு போய்க் கொடுத்தது எல்லாம் கண்முன் ஒவ்வொன்றாகத் தெரிந்தன. அவள் கண்களை நீர் மறைத்தது. கடைசியாக அந்த இடத்தைவிட்டு எழுந்து கல்லூரியின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று அங்குள்ள ஜடப் பொருள்கள் ஒவ்வொன் றுடனும் மானசீகமாக உரையாடிவிட்டு மனத்திருப்தியோடு மகிழ்ச்சியோடு காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

வாசலில் இருந்த வேப்பங்கன்று அவள் பார்வையில் விழுந்தது. ''ராஜா! காரைக் கொஞ்சம் நிறுத்து" என்று கூறி அந்தச் செடியைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந் தாள்.

நான் வைத்த கன்று. இப்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டது! இதற்கு யாராவது தண்ணீர் ஊற்றுகிறார்களோ இல்லையோ?'' என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டவள், "ம்... புறப்படு போகலாம்'' என்றாள்.

கார் வீட்டை அடைந்தது. ராஜாவுக்கு ஒரே திகில் அத்தையை நல்லபடி கொண்டு சேர்த்துவிட்டான். மேலே கொண்டுபோய்க் கட்டிலிலும் படுக்க வைத்தாகி விட்டது.

அப்புறம் தான் அவனுக்கு மூச்சு வந்தது.

ஞானத்தை ஹார்லிக்ஸ் கொண்டுவரச் சொல்லி அத்தையின் களைப்புத் தீரக் குடிக்கச் சொன்னான். அவளால் ஒரு வாய்க்கு மேல் அருந்த முடியவில்லை. அன்றிரவெல்லாம் அவள் வேப்பங்கன்று... அகாதா!...'' என்று ஏதோதோ வாய் பிதற்றிக்கொண்டிருந்தாள்.

காலையில் பொழுது விடிந்தபோது அவள் பேசக்கூடச் சக்தியற்றவளாய்ப் படுத்துக் கிடந்தாள்.

நல்ல வேளையாக அன்று அகாதாவே அவளைப் பார்க்க வந்துவிட்டாள். விடுமுறையைக் கழிக்க பங்களூருக்குப் போயிருந்தவளுக்குப் பிரின்ஸிபாலைப் பார்க்கவேண்டும் போல் தோன்றவே, ஒரு வாரம் முன்னதாகவே திரும்பி

வந்துவிட்டாள்.

அத்தை! அகாதா வந்திருக்கிறார்'' என்று ராஜா கூறுயதும், பார்வதி கண் விழித்துப் பார்த்தாள். அகாதாவைக் கை ஜாடை காட்டி அருகில் அழைத்து அமரச் சொன்னாள். அகாதாவுக்கு உணர்ச்சி பொங்கித் துக்கம் நெஞ்சை அடைத்தது.

''அகாதா! நேற்றெல்லாம் உன் ஞாபகமாகவே இருந்தேன், நீயே வந்துவிட்டாய்! கல்லூரியை நீ தான் கவனித் துக் கொள்ள வேண்டும்.'' பார்வதியால் அவ்வளவுதான் பேசமுடிந்தது. மூச்சு முட்டித் திணறவே கண்களை மூடிக் கொண்டாள்.

ரெஸ்ட் எடுத்துக் கொள்ளட்டும்; அவரை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம்'' என்று

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.