(Reading time: 9 - 17 minutes)
Muthu Sippi
Muthu Sippi

காலேஜுக்குப் போய்விட்டான்.

  

மாலை அவன் வீடு திரும்பியதும் கல்யாணம் அவனை, "வாடா குழந்தை!" என்று என்றுமில்லாமல் வரவேற்றார். அத்தோடு விட்டு விடாமல் , ”உனக்கு இதெல்லாம் எத்தனை நாட்களாகப் பழக்கம்!" என்று கேட்டும் வைத்தார். வீட்டிற்குள்ளிருந்து பார்வதி வெளியே வந்தாள்.அவள் பட்டவர்த்தனமாக, "ஏண்டா அப்பா! ஊரிலே எங்களை மானத்தோடு வாழ விடமாட்டாய் போல் இருக்கிறதே?" என்று கேட்டாள்.

  

அந்த வயசிலே காதல் கடிதம் எழுதுவது அவ்வளவு தவறு என்று யாருமே சொல்ல மாட்டார்கள். ’இந்த மாமாவுக்கும் மாமிக்கும் நம்மைக் கண்டால் ஆகவில்லை. ஏதாவது சொல்கிறார்கள். அந்த அசட்டுப் பெண் இதையெல்லாம் பெரியவர்களிடம் சொல்லுவாளோ?' என்று நினைத்தான் மூர்த்தி. அந்தப் பெண்ணின் தாய் சற்று முன்பு வீட்டுக்கு வந்ததும் அவனுடைய திருவிளையாடல்களைக் கூறி அந்தக் கடிதத்தைக் காண்பித்ததையும் அவன் அறியவில்லை . அவசரப்பட்டு எதுவும் பேசக் கூடாது என்ற தீர்மானத்துக்கு வந்தவனாக மூர்த்தி அன்றிலிருந்து பதினைந்து தினங்கள் வரையில் அந்தப் பெண்ணின் எதிரில் போகாமல் நடந்து கொண்டான்.

  

ஒரு தினம் மூர்த்தி காலேஜிலிருந்து வீட்டுக்கு வந்ததும் கல்யாணராமன், ”ஏண்டா! அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதாமே? உன் காதல் எல்லாம் ஊதலாகி விட்டது. பார்த்தாயா? இதற்குத் தான் யோசனை இல்லாமல் நடக்கக்கூடாது என்கிறது" என்றார்.

  

மூர்த்தி ஸ்தம்பித்து நின்றான். அவன் கால்கள் பூமியில் புதைந்து போன மாதிரி ஆடாமல் அசையாமல் நின்றன.

  

*என்ன! அவளுக்குக் கல்யாணமா?" என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். உடலில் இருக்கும் ரத்தமெல்லாம் மூளைக்கு விறு விறு என்று ஏறிற்று. எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று

One comment

  • :Q: moorthyin manathil enna ennam endru theriyavillaiye. Nice epi.eaverly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.