Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 16 - சரோஜா ராமமூர்த்தி
1.16. டவுன் பஸ்
அடுத்த நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் பவானிக்குப் பாலுவை அழைத்துப் போய் வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு வரவேண்டும் என்கிற விஷயம் நினைவுக்கு வந்தது. ஆனால் பாலு படுக்கையை விட்டு எழும் போதே கேரம் பலகையைப் பற்றி நினைத்துக் கொண்டே எழுந்தான். அம்மாக்குத் தெரியாமல் மூர்த்தி மாமாவைப் பார்த்து அந்தப் பலகையை வாங்கி வந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். எழுந்திருந்து பல் தேய்த்து முடிப்பதற்குள் பாவனி அவனைப் பல தடவைகள் 'எத்தனை மணிக்குப் பள்ளிக்கூடம் போகவேண்டும்' என்று கேட்டு விட்டாள்.
பாலு நிதானமாகப் பற் பொடியை இடது கையில் வைத்துக் கொண்டு மதில் சுவர் ஓரமாகப் போய் அடுத்த வீட்டில் எட்டிப் பார்த்தான். மூர்த்தியும், பற்பசையும் ’பிரஷ்' ஷையும் கையில் எடுத்துக்கொண்டு "என்னடா விஷயம்?" என்று கேட்டுக் கொண்டு பவழ மல்லிகை மரத்தடியில் வந்து நின்றான். பாலு பயத்துடன் உள்புறம் பார்த்து விட்டு, "மூர்த்தி மாமா! கேரம் பல கையை மச்சிலிருந்து எடுத்துத் தருகிறீர்களா?" என்று கேட்டான்.
"ஓ! எடுத்துத் தரேன்."
"..என்னோடு யார் ஆடுவார்கள்?' '
*பூ! பிரமாதம்! நான் ஆடிவிட்டுப் போகிறேன். இதற்காகக் கவலைப்படுவாயோ?" என்று கேலியாகக் கூறிவிட்டுச் சிரித்தான் மூர்த்தி.
அதற்குள் சமையலறையிலிருந்து பவானி பாலுவை அழைத்தாள்.
”இன்றைக்கு என்ன... அழுது வடிகிறாய்? பள்ளிக் கூடம் போக வேண்டுமென்றால் உனக்கு அழுகை தான் போ" என்று கூறியதைக் கேட்டதும் மூர்த்தி, ' ஏண்டா இன்று பள்ளிக்கூடத்துக்குப் போகிறாயா என்ன?" என்று விசாரித்தான்.
"போகவேண்டும் மாமா. அம்மாவும் நானும் போய் வரவேண்டும். அதுக்காகத்தான் அம்மா