(Reading time: 5 - 9 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 24 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

அத்தியாயம் 24 -- "வேறு நல்ல வரன்!"

  

ல்யாணம் சென்ற பிறகு ரங்கநாத முதலியார் மாசிலாமணியைப் பார்த்து, "ஏன் சுவாமி, அந்தப் பிள்ளையாண்டான் சொல்லிவிட்டுப் போவது உண்மைதானா? உங்களுக்கு வேலை கிடைத்து விட்டதா?" என்றார்.

  

"உம்... உம்... ஐம்பது சதம் கிடைத்த மாதிரிதான்."

  

"அதென்ன ஓய், வாத்தியார் மாதிரி மார்க்குப் போட்டுப் பேசறீர்?"

  

"வாத்தியார் வேலைக்குத்தான் மனுப் போட்டேன். மனுப் போட்டதில் ஐம்பது சதவீத வேலை முடிந்தது. அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஐம்பது சதவீத வேலைதான் பாக்கி. ஆக ஐம்பது சதவீதம் வேலை கிடைத்த மாதிரிதானே?"

  

ரங்கநாத முதலியார் சிரித்தார்.

  

"இப்படிச் சிரித்து எரிச்சலைக் கிளப்புவதற்குப் பதில் சிபாரிசு செய்து என் மனசைக் குளிர்விக்கலாம்" என்றார் மாசிலாமணி. "இந்த ஊர்ப் பள்ளிக்கூட நிர்வாகக் கமிட்டியில் நீரும் அங்கத்தினராமே?"

  

"ஆகட்டும் சுவாமி, ஆகட்டும்! பேஷாகச் சிபாரிசு செய்கிறேன். ஆனால் பலன் இருக்குமென்று தோன்றவில்லை. சின்னப் பசங்க எத்தனையோ பேர் பி.ஏ., பி.டி. எல்லாம் பாஸ் பண்ணிட்டு மனுப் போட்டிருக்காங்க. உபாத்தியாயர் பயிற்சி பெறாத உமக்கு அதுவும் இந்த வயதில் எப்படி வேலை கிடைக்கும்? என்னைக் கேட்டால் உங்கள் கஷ்ட மெல்லாம் தீர ஒரு வழி சொல்வேன்...."

  

"பேஷாய்ச் சொல்லுங்கள். குருடனுக்க வேண்டியது கண்தானே. அதை யார் கொடுத்தால் என்ன?"

  

"ஏதோ கடவுள் உங்களுக்கு மூக்கும் முழியுமாகப் பார்க்க லட்சணமாக ஒரு பெண்ணைக்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.