(Reading time: 7 - 13 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 20 - சரோஜா ராமமூர்த்தி

2.20. மாமரமும் மாங்கனியும்

  

ரு தோட்டம் இருக்கிறது. அதில் உயர்ந்த ஜாதி மாமரம் ஒன்று உண்டு. அம்மரத்தில் அபூர்வமாக அந்த வருஷம் நாலைந்து பழங்கள் தான் பழுத்தன. காய்கள் சிறியவையாக இருந்த முதற்கொண்டே மரத்தின் சொந்தக்காரர் அந்தப் பழத்தின் சுவையை அனுபவிக்க ஆவலுடன் இருக்கிறார். அணிற் பிள்ளைகள் கடித்துப் போடாமல் பார்த்துக் கொள்கிறார். காய்கள் மஞ்சள் நிறம் காணும் போது கட்டும் காவலும் அதிகமாகிறது. கடைசியாகப் பழம் சாப்பிடுவதற்குத் தயாராக இருப்ப தாகத் தோட்டக்காரன் கூறுகிறான் , அவன் பறித்து வந்து கொடுத்த பழங்களைக் கடவுளுக்குப் படைத்து விட்டுத் தான் அவர் உண்கிறார். அதன் சுவையைப் பூராவும் அவரால் அனுபவிக்க முடிகிறது.

  

இதைப் போலத்தான் இல்லற வாழ்வும் இருக்கிறது. மகனோ, மகளோ , தகுந்த வயதை அடைந்ததும் பெற்றோர் மணமுடித்து வைக்கிறார்கள். காதலனும் காதலியும் மனம் விட்டு ஒருவரோடொருவர் பேசுவதற்குச் சட்டென்று பெரியவர்கள் சந்தர்ப்பம் அளிப்பதில்லை. கல்யாணம் முடிந்தவு டன் ஆடிக்கு மருமகனை அழைக்கிறார்கள். பிறகு தீபாவளி வருகிறது. பின்னர் தைப்பொங்கல் வருகிறது. கணவனும் மனைவி யும் படிப்படியாக மனம் விட்டுப் பழகுகிறார்கள். அன்பு நிதானமாக மாம்பழத்தின் சுவையைப் போல வளருகிறது.

  

ராதாவும் மூர்த்தியும் கல்யாணம் பண்ணிக்கொண்ட விதமே அலாதியானது. பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் தம்பதிகள் பழக வேண்டிய முறையில் ஆறே மாதங்களில் அவர்கள் பழகினார்கள்; பேசினார்கள். 'சீ! வாழ்க்கை என்பது இதுதானோ? இதற்குத்தான் கல்யாணம் என்கிற கால்கட்டைக் கட்டிக் கொண்டோமா?' என்று மூர்த்தி பல தடவைகள் நினைத்தான்.

  

ராதாவுக்கும் அவனுக்கும் கல்யாணமாகி ஏழெட்டு மாதங்களுக்குள் மூர்த்தியின் நடத்தையில் பல மாறுதல்களைக் கண்டாள் ராதா. மாதம் அவன் சம்பளத்துக்கு அந்த வீட்டில் செலவு இல்லை. அவனுடைய தேவைகள் அனைத்தையும் ராதா கவனித்துக் கொண்டாள். அவனுக்கென்று பிரத்யேகமான அறை. அந்த அறைக்கு அடுத்தாற் போல் ஸ்நானம் செய்ய அறை இருந்தது. மாடியிலேயே சகல வசதிகளும் நிரம்பி இருந்தன. சாப்பிடும் போது சில நாட்களில் மூர்த்தி கீழே வருவான். அவன் அதிகமாகத் தன் மைத்துனர் ஸ்ரீதரனுடன் பேசுவதில்லை. இருவரும் வெளியே செல்லும்போது தோட்டத்தில் சந்தித்துக் கொள்வார்கள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.