(Reading time: 8 - 16 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 31 - சரோஜா ராமமூர்த்தி

2.31. உள்ளத்துக்கு வைத்தியன்!

  

ராதாவின் வாழ்க்கையில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்தன. திறந்த வெளியிலே சிறகடித்துப் பறக்கும் வானம்பாடியைப் போல அவள் தன் கல்லூரி நாட்களில் இருந்து வந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். படிப்பு முடிந்த பிறகு கூட அவள் படித்து வந்த கல்லூரி யோடு அவளுக்குத் தொடர்பு இருந்து கொண்டே வந்தது. கலை விழா, நாடகம், சொற் பொழிவு யாவற்றிலும் ராதா முதன்மையாக நின்று உழைத்து வந்தாள். அவளை மணந்து கொள்ள எவ்வளவோ வாலிபர்கள் தவம் கிடந்தார்கள். அழகும், படிப்பும். செல்வமும் நிரம்பிய அந்தப் பெண்ணிடம் அவர்களுக் கெல்லாம் ஒரு பிரமை: ஸ்ரீதரனும் அவளை நல்ல இடத் தில் வாழ்க்கைப்படுத்த வேண்டும் என்றுதான் விரும்பினார். படித்தவனாகவும் சொத்துள்ளவனாகவும் மருமகன் தேட இருந்தார்.

  

ஆனால், விதியின் செயல் வேறாக இருந்தது. அவள் பார்வையில் பட்ட மற்றவர்களைவிட. மூர்த்தி அவளுக்குச் சிறந்தவனாகத் தோன்றினான். அவனிடத் தில் தன் மனதைப் பறிகொடுத்தாள். அவனிடமிருந்து அவள் செல்வத்தையோ, போக பாக்கியங்களையோ எதிர்பார்க்கவில்லை. உண்மையான அன்பு ஒன்றைத் தான் எதிர்பார்த்தாள். கணவனும் மனைவியும் அன்பிலே லயித்து விட்டால் மற்ற சிறு பூசல்கள் யாவும் மறைந்து விடும். அந்தப் பிடிப்பு - அதாவது காதல்-- அவர் களிடம் ஏற்படவில்லை .

  

ராதாவுக்கு தனிமை உணர்ச்சி ஏற்பட்டது. உலகத்தில் தான் தனியாக இருப்பது போல் தோன்றியது. நெஞ்சில் சுமக்க முடியாமல் துயரச் சுமைகளைச் சுமந்து கொண்டு இருந்தாள். அவற்றைக் கீழே இறக்க அன்புள்ளம் கொண்டவர் யாராவது தேவை. அது யார்? யாருமே இல்லை என்று தான் அவள் மனம் விடை பகர்ந்தது.

  

அன்று வழக்கம் போலத்தான் சூரியோதயம் ஆயிற்று. வாள் வெளியில் களங்கம் இல்லை. நிர்மலமான ஆகாயத்தில் பொன்னிறம் காட்டிக் கொண்டு கதிரவன் விசையாக எழும்பி வந்தான். வாழ்த்தி வரவேற்க வேண்டிய காலைப் பொழுது. இளமையும் இன்பமும் ததும்பும் அக்காலை வேளையில். ராதா மெல்லக் கண் களை விழித்துப் பார்த்தாள். அவள் மனசில்- அதாவது தூங்கும்போது - ஒரு சலனம் ஏற்பட்டது. திடீரென்று விழித்துக் கொள்வாளாம் ராதா. அவள் படுக்கை அருகில் மூர்த்தி அமர்ந்து அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.