(Reading time: 10 - 19 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

"அதில் எவ்வளவு பணத்தை வீண் செலவு செய்கிறார்கள்? புகைக்குடிக்கு எவ்வளவு பணம் செலவாகிறது தெரியுமா?"

  

"அய்யோ! கணக்கே இல்லை. அது மேற்கு நாட்டுக்கு வேண்டுமானால் ஒரு வேளை பொருந்தலாம். அது குளிர்நாடு. அங்கும் பலர் அதை வெறுக்கிறார்களாம். இது வெப்பமானநாடு, இங்கே உடம்புக்குக் கெடுதி அல்லவா?"

  

"ஆமாம்"

  

"கவர்னர் மாளிகையில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு முறை தேநீர் தரப்பட்டதாம். சிற்றுண்டியும் தேநீரும் முடிந்த பிறகு சிகரெட்டுகளும் வழங்கப்பட்டனவாம்."

  

"அப்படியா? உண்மையாகவா?"

  

"மேற்கு நாட்டுப் பழக்க வழக்கங்களில் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நம்மவர்கள் அப்படிச் சலித்து எடுப்பதே இல்லை. சலித்தாலும் மேலே நிற்கும் கப்பியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்."

  

அப்போது என் கை கீழே அழகுக்காக வளர்க்கப்பட்டிருந்த ஒரு செடியிலிருந்து ஓர் இலையைக் கிள்ளி மூக்கின் அருகே கொண்டுவந்தது. அது நாற்றமாக இருக்கவே, "சே!" என்று கீழே எறிந்து, அது என்ன செடி என்று பார்த்தேன்.

  

என் செயலைக் கவனித்த அவன், "அய்யோ! அதையா முகர்ந்தாய்? கெட்டநாற்றமாக இருக்கும். சீமைச்செடி அது. ஜிரேனியம் என்று பெயர். பக்கத்தில் உள்ளது மெகர்த்தா. பூவைப் பறித்து முகர்ந்து பார் அதுவும் அப்படித்தான் இருக்கும்.

  

அப்படியே எடுத்து முகர்ந்தேன். அவன் சொன்னது சரியாக இருந்தது.

  

அந்த மாணவன் உடனே என்னை நோக்கி, "உலகம் இப்படித்தான்; தெரிந்துகொள். இங்கே இருப்பவர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்தப் பூக்களைப் போல் அழகான

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.