(Reading time: 14 - 28 minutes)
Vata malli
Vata malli

ஆறுமுகப் பாண்டி, அரண்டு போய் நின்ற போது, பிள்ளையார் மீண்டும் போர்க்குரலில் பேசினார்.

  

டேய் பெரியவன்... நான் போறேண்டா... திரும்பி வராத இடத்துக்கா போறேண்டா... உன் தங்கச்சி மரகதம் கலியாணத்தை நல்லா நடத்துடா...”

  

பிள்ளையார், துண்டை உதறினார். சுயம்பு, சும்மாவே இருந்தான். இதற்குள் மரகதம் அங்கேயே அவன் தலைக்குள் சட்டையை நுழைத்தாள். பாண்டை எடுத்து அவன் கால் பக்கம் கொண்டு போனாள். பிள்ளையாரோ, பேரப் பிள்ளைகளைக் கன்னத்தில் தட்டிவிட்டு, போகப் போவது போலிருந்தார். சுயம்புவால் பொறுக்க முடியவில்லை. சப்தம் போட்டுப் பேசினான்.

  

போறதாய் இருந்தால், லுங்கியோடதான் போவேன்...”

  

அறைக்குள் போய் லுங்கியைக் கட்டிக் கொண்டு வந்த தம்பியிடம், ஆறுமுகப்பாண்டி சூட்கேஸை நீட்டினான். பிறகு இடுப்பில் குழந்தையோடு நின்ற மனைவியிடம் சில ரூபாய் நோட்டுக்களை நீட்டினான். அவள் அவற்றைக் குழந்தையின் கையில் கொடுத்து மைத்துனனை நெருங்கி, அவனது சட்டைப் பைக்குள் குழந்தையின் ரூபாய்க் கரத்தை உள்ளே விட்டாள். அந்தக் குழந்தை ரூபாய் நோட்டைக் கொடுக்காமல், அவன் சட்டைப் பைக்குள் என்ன கிடைக்கும் என்பது போல் துழாவியது. உடனே அந்தக் குழந்தையின் கையைத் திருகி, அவளே ரூபாயைப் போட்டாள்.

  

சுயம்பு திரும்பித் திரும்பி நடந்தான். வேப்பமரத்தைத் தாண்டி, அந்த வாதமடக்கிப் பக்கம் போனான். பெட்டியை அங்கேயே வைத்துவிட்டு அக்காவை நோக்கி ஓடி வந்தான். அவளைக் கட்டிப் பிடித்து, அவள் இரண்டு கைகளையும் தன் கரத்திற்குள் சங்கமமாக்கிக் கொண்டு, அவன் காதில் கிசுகிசுத்தான். உடனே அவள், அழவில்லையானாலும், விம்மினாள். தம்பியின் தலையைக் கோதிவிட்டபடியே, “என் பிரச்னையை விடுடா... நீதான் இப்ப எனக்குப் பிரச்னை” என்றாள். பிறகு அவன் நெற்றியில் முத்தமிட்டு அவனைத் திருப்பிவிட்டாள். அம்மாக்காரி பார்வையால் கேட்டாள். அண்ணன், வார்த்தையாலே கேட்டான். எப்படிச் சொல்ல முடியும்? ‘எக்கா... எக்கா... உன் மாப்பிள்ளை ஊருக்குப் போய் ‘பையனைப்’ பார்த்துட்டுத் தான் இனிமேல், ஊருக்கு வருவேன். உனக்கு வாக்குக் கொடுத்ததை மறக்கலக்கா... எனக்குப் பிடிக்காட்டா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.