(Reading time: 15 - 30 minutes)
Vata malli
Vata malli

பெருக்கத்தை, இயற்கை ஒரு கட்டுக்குள் வைக்க விரும்புகிறது. இதற்காகப் பிறந்தவர்கள் அலிகள். ஆணின் விந்துத் துகள்களில் உள்ள கோடிக்கணக்கான உயிர்ப்புகளில் ஒன்று, பெண் தன்மை உள்ளதாகவும் இன்னொன்று ஆண் தன்மை உள்ளதாகவும் இருக்கும். பெண்ணின் கருப்பை முட்டையோ பெண் தன்மை உள்ளது. இதில் ஆணின் ஆண் தன்மை உள்ள உயிர்த்திரள் சேர்ந்தால், குழந்தை ஆணாகிறது. பெண் தன்மை சேர்ந்தால் பெண்ணாகிறது. இதை ‘எக்ஸ்எக்ஸ்’ ‘எக்ஸ் ஒய்’ என்று சொல்வார்கள். தேனிக்களில் ராணி ஈ, கருத்தரிப்பதற்காக, வேலைக்கார ஈக்கள், ஒரு காரியம் செய்கின்றன. பருவதாகத்தால், பறந்து போகும் பெண் ஈ, பின்னாலேயே, ஆண் தேனிக்களைத் துரத்துகின்றன. இனச்சேர்க்கை ஏற்பட்டதும் கூட்டுக்குத் திரும்பும் ராணி ஈ, முட்டைகள் இடும். இவற்றில் வெளிப்படும் ஆண் ஈக்களை அப்படியே விட்டுவிடும். ஆனால் பெண் ஈக்கள் பிறந்தால், அவற்றில் ஒன்றையோ இரண்டையோ போஷாக்குடன் வளர்த்து, மற்ற பெண் ஈக்களை, போஷாக்கு இல்லாமல் காயடிக்கும். போட்டிக்கு அவை வந்துவிடக்கூடாதே என்கிற பயம். இப்படி போஷாக்கு குறைந்த அலி ஈக்கள்தான், வேலைக்கார ஈக்கள். இதனால் மனித சமுதாயத்திலும் ஏதோ ஒரு சமச்சீர் நிலையை பராமரிப்பதற்கு அலிகள் உருவாகிறார்கள். இவர்களுக்கு நம்மைப்போல்தான் நாற்பத்தாறு குரோமோசங்கள் என்றாலும், இவர்களுக்கு எப்படி இந்த அலித்தன்மை வருகிறது என்பது இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆனால், தேனி இனம் வாழக் காரணமான வேலைக்கார ஈக்கள் போல், இவர்களும் மானுடம் வாழ பிறப்பிக்கப்படுகிறார்கள். ஆனாலும், அலித்தன்மைக்கு குரோமோசங்களில் ஏற்படும் திரிபுகளோ ஹார்மோன் சுரப்பிகளின் கோளாறோ... துல்லியமாய் தெரியவில்லை.

  

மானுடத்தின் இந்த முன்றாவது பிரதியான அலியை கிண்டல் செய்வதும் கேலி செய்வதும் காட்டுமிராண்டித்தனம். நமக்கு சாப்பிடுவது எப்படி இயற்கையோ அப்படி அவர்களுக்கு பெண்ணாகவோ, அல்லது ஆணாகவோ பெண் உடம்பில் ஆணும், ஆண் உடம்பில் பெண்ணும் இருப்பது இயற்கை. இதனால் இவர்கள் வீரத்திலோ விவேகத்திலோ குறைந்தவர்கள் அல்ல. தில்லியிலிருந்து மதுரை வரைக்கும் வந்து நம் முன்னோர்களுடைய முதுகுத் தோலை உரித்த மாலிக்காபூர் ஒரு அலி. இன்னும் பலர் மனதுக்குள் சேலை கட்டி, உடம்புக்கு ஆணுடை தரித்து ஆபீஸர்களாய் கூட இருக்காங்க, ஒங்க மகனுக்கும், சொல்ல வேண்டிய விதமாச் சொல்லியிருந்தால் அவரும் ஒரு என்ஜினியரா மாறியிருக்கலாம். டாக்டருக்கு படிக்கிற எனக்கே இது ஞாபகத்துக்கு வரல. ஒங்களைச் சொல்லிக் குத்தமில்லே. ஆனால் அவரு சேலை கட்டறது, பெண் மாதிரி நடந்துக்கறது வேணுமுன்னு செய்யற காரியம் இல்ல. மருத்துவத்துறையில், அலிப்பிறப்பை, ‘ஹெர்மா - புராடக்ட்’ என்று சொல்கிறோம்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.