(Reading time: 14 - 27 minutes)
Vata malli
Vata malli

பிணங்கள். அடியும் தலையுமாக உச்சிமுதல் பாதம் வரை ஒன்றுபட்டு நின்ற மனித எலும்புகள் சிதறிக் கிடக்கின்றன. ரத்த நாளங்கள் வெடித்துக் கிடக்கின்றன. ஆனால் அவருக்குத் தாகம்.

  

மேகலை அங்குமிங்கும் பார்க்கிறாள். ஒரு தெருக்குழாய். அங்கே போகிறாள். தோழிகள் இழுத்துப் பிடிக்கிறார்கள். அந்தக் குழாயைத் திறந்து தண்ணிரைக் குடிக்கிறாள். கால் நிமிடத்திற்குப் பிறகு வாயில் உள்ள தண்ணிரை அவளிடம் கேள்வி கேட்டவர் பக்கம் கொப்பளிக்கிறாள். செத்தால் சாவோம் என்கிற வேகம்! சாகாவிட்டால் இந்தப் பொய்யைத் தெரிந்தவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற தாகம்!

  

அந்த நால்வரும், மயானச் சாலைகள் வழியாகக் குடியிருப்புக்குத் திரும்புகிறார்கள். நீலிமா குறுக்கும் நெடுக்குமாய்ச் சுற்றுகிறாள். இன்னும் எந்தக் கதவும் திறக்கப்படவில்லை. சுடுகாட்டிலாவது வெட்டியான் சத்தம் இருக்கும். சுடலைத் தீயின் பாம்புபோல் சீறும் சத்தமாவது கேட்கும். ஆனால் இதுவோ மனிதர்கள் சும்மா மூச்சு மட்டுமே விட்டுக்கொண்டிருக்கும் மயானப் பகுதி. இன்னும் ஒரு வாரத்திற்குத் தம்மடக்கி வாழ்வதற்காக மூச்சைக்கூட அடக்கி விடுவது போன்ற ஒரு ஒத்திகை.

  

மேகலை நீலிமாவிடம் கேட்டாள்.

  

அம்மா எங்க...”

  

அம்மா இங்க வரலியா. நான் எங்கெல்லாமோ தேடிட்டு இங்க வாறேன்...”

  

மேகலை அழுவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவளோ பித்துப் பிடித்து அந்த சர்தாரிணிப் பெண், இவள் போனபோது எப்படிக் கிடந்து எப்படி முழித்தாளோ, அப்படிக் கிடந்து, அவள் போலவே கண்கள் சொருக, வாய் துடிக்க, அந்தத் தரையிலேயே சரிந்தாள்.

  

-----------------

தொடரும்...

Go to Vata malli story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.