தப்பும்மா.. மிருகங்கள் ரொம்ப நல்லதும்மா...”
மேகலை, அந்தப் பகுதியில் தான் கண்ட காட்சிகளை விவரித்தாள். இருவரும் கண்ணிரும் கம்பலையுமாக ஒருவர் முகத்தை ஒருவர் துடைத்தபோது நான்கைந்து அலிகள் அவர்களுக்கு முன்னால் வந்து கும்பிடு போட்டார்கள்.
“நாங்க போபாலுல இருந்து வாரோம். முர்கே மாதாவுக்கு ஒரு கோவில் கட்டுற விஷயமா...”
“ஆமா. உங்க லெட்டர் கிடைச்சது... கோவில் கட்ட எவ்வளவு செலவாகும்...”
மேகலை அவசர அவசரமாய்க் குறுக்கிட்டாள்.
“எம்மா... முர்கே மாதாவுக்கு கோவில் கட்டட்டும். வேண்டான்னு சொல்லல. ஆனால் அந்தக் கோவிலோட கோவிலா, நம்மள மாதிரி பிறப்பெடுத்து சூடுபட்டவங்களுக்கும், தெருவுல தூக்கியெறியப்பட்டவங்களுக்கும் ஒரு சத்திரமும் சேர்த்து கட்டணும்னு சொல்லுங்கம்மா...”
“என் ராசாத்தி. இந்தத்திட்டம் எனக்கு வரல பாரு. சரி அப்புறமா இவங்ககிட்ட பேசி மொத்தம் எவ்வளவு ஆகுன்னு கணக்கு பாரு... பாதிச் செலவ நாம குடுத்துடலாம்...”
“சரிம்மா. பாதில பாதிய இப்ப குடுப்போம். அப்புறம் வேலை எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சு மீதியை அப்புறம் கொடுக்கலாம்... தப்பா பேசிட்டேனாம்மா...”
“இல்லடி என் செல்லப் பொண்ணு... தெக்கத்திப் பொண்ணுங்களே புத்திசாலிங்கதான்...”
போபால், அலிகள் போய்விட்டார்கள். மத்தியானம் கணக்கோடு வருவதாக சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு அகன்றனர். இதற்குள் மேகலை, அம்மாவின் காயங்களை தனது கைக்குட்டையால் துடைத்துவிட்டாள். பிறகு “உங்களமாதிரி பெரிய மனசு உள்ளவங்களையும் கடவுள் இப்படி படச்சிட்டாரே” என்று தாபத்தோடு சொன்னாள். கங்காதேவி அவள் கைகளை எடுத்துத் தன தோளில் போட்டுக்கொண்டே உபன்யாசம் செய்வது போல ஒப்பித்தாள்.
“மேகல்... உடம்புல ஊனம் உள்ளவர்களுக்கு இயற்கை நஷ்ட ஈடா ஒரு அசாத்திய சக்திய