(Reading time: 6 - 12 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

Flexi Classics தொடர்கதை - அவள் விழித்திருந்தாள் - 01- சரோஜா ராமமூர்த்தி

  

யல் நாட்டு சென்டின் மணம் குபீரென்று வீடெங் கும் பரவியது. அந்த வாசனை அவன் வரும்போது மட்டும் வரும் வாசனை. ஊரெங்கும் விளக்கேற்றி விட்டார்கள். அந்த வீடு மட்டும் இருண்டு கிடந்தது. 'வீட்டில் ஏன் அஸ்தமித்த பிறகு கூட விளக்கு ஏற்றவில்லை' என்று தன்னையே சேட்டுக் கொண்டு பட்டப்பா ஜன்னல் வழியாகக் காமரா அறைக்குள் வருகிற வெளிச்சத்தில் அங்கு கிடந்த மேஜை மீது பூப்பொட் டலத்தையும், பலகாரங்களையும் வைத்துவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தான். காரை பெயர்ந்த சுவரில் 'ஸ்விட்ச்' லொட லொடவென்று ஆடிக்கொண்டிருந்தது. மிகவும் கவனமாக அதைத் தட்டிவிட்டதும் அறையில் விளக்கு எரிந்தது.

  

கூடத்தைத்தாண்டி வெனிச்சம் லேசாய்ப்பரவி சமையல் றையில் அவள் தரையில் படுத்திருப்பதைக் காட்டிக் கொடுத்தது. சரிந்து கிடந்த மலர்க்குவியல் மாதிரி இருந்தாள் அவள். பின்னல் தரையில் புரள, அதிலிருந்து மலர்ச்சரம் துவண்டு விழ, ஒரு சித்திரம் போல் இருந்தாள் நர்மதா. இனிமேல் ஒளிந்து கொள்வதில் லாபமில்லை என்று நினைந்து நமர்தா வெளியே வந்து நின்றாள். அவனிடமிருந்து வீசும் வாசனையை முகர்ந்து முகம் சுளித்தாள் அவள். பட்டப்பா மட்டும் தன்மனைவியை ஆசையோடு, ஆவலோடு ஏற இறங்கங் பார்த்தான். வெட வெட வென்று ஒரு கொடிபோல செக்கச் செவேல் என்று சிலைமாதிரி இருந்தாள். அவள் வெடுக்கென்று மூகத்தைத்திருப்பிக்கொண்டாள்.

  

"என்ன நர்மதா வந்திருக்கிறவனை வாங்கன்னு சொல்ல மாட்டேங்கறே- அவள் முகம் சிவந்தது.

  

"உங்களை இங்கே வரச்சொல்லி யார் கூப்பிட்டது?"

  

"உன்னைப் பாக்கணும்னு ஆசையா இருந்தது நர்மதா. எப்பப்பாத்தாலும் ஒன் நெனப்புத்தான் எனக்கு. "

  

அவள் சூள் கொட்டினாள். கைகளைத் தூக்கி நெட்டி முறித்தாள்.

  

"பாத்தாச்சோல்லியோ? போங்களேன். "

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.